மலேசியாவில் இலக்கிய சாதனை தமிழ் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் இலக்கிய சாதனை தமிழ் விழா

நவம்பர் 14,2017  IST

Comments

 

“ தமிழன் உருவ வழிபாட்டைக் கடந்தவன். ஓளி வழிபாட்டை, உணர்வு வழிபாட்டைக் கொண்டவன். முதன் முதலில் தமிழ் வழிபாடு சூரிய வழிபாடாகவே இருந்தது. நெற்றிக் கண்ணைத் திறந்தவன் எவனோ அவனே தமிழன். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமான், ஒளிக் கடவுள் அகத்தீசருக்கு உபதேசித்த மொழி தமிழ்..நெற்றிக் கண்ணைத் திறந்து பகுத்தறிவுடையவர்களாகத் திகழ்ந்து தரணியை உயர்த்தப் பரிபூரண நல்லாசிகள் “ எனத் திருமூர்த்தி மலை தென்கயிலைத் தமிழ்ச்சங்கம், உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கோலாலம்பூரில், மலேசியத் தமிழ் மணிமன்றம் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்திய சிறு கதை நூற்றாண்டு விழா மற்றும் உலகளாவிய 100 சிறு கதைகள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், பிரபஞ்சத்தின் மையத்தில் ஒரு மெய்ப்பொருள் உள்ளது. அதுவே உயிர்ப் பொருள், பரம்பொருள். அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்ற அளவற்றதும் நிகரற்றதுமான உணர்வுப் பொருள். அந்த மெய்ப் பொருளைக் காண்பதே அறிவு. பேசுவது மட்டும் தமிழ் அல்ல, உணர்வது தமிழ். தமிழா! உன்னை உணர்ந்து உலகத்தை உயர்த்து. அறிவின் இலக்கணம் மெய்ப்பொருள் காண்பது. இன்றைய அறிவு பஞ்சபூதப் பொருட்களை மட்டும் அறிகின்ற சிற்றறிவு. ஐம்புலனைக் கடந்து இயங்குகிற மெய்ப் பொருள் ஒன்றுளது. அதுவே சிற்றறிவுக்கு எட்டாத பேரறிவு .அதுவே மூலப் பொருள், முழுமைப் பொருள். இன்றைய கல்வி அறிவு புறப் பொருளை மட்டும் அறிகின்ற கல்வியாக உள்ளது. ஒளி வழிபாடு ஆக்கல், காத்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல் என்ற தத்துவத்தைக் குறிக்கிறது . இதைக் குறிக்கவே விழாக்களில் விளகேற்றப்படுகிறது. தமிழில் இல்லாதது எதுவுமில்லை. முருகன் அகத்தீசருக்குச் சொன்ன மந்திரம் “ ஓம் “. அ உ ம். அடிநாக்கிலிருந்து தோன்றுவது அகரம். இடை நாக்கிலிருந்து உதிப்பது “ உ” . நுனி நாக்கிலிருந்து எழுவது “ ம் “

உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ். இது அழியாத, மாறாத, பெருமைக்குரிய மொழி. ஒரு முறை சங்கராச்சாரியாருக்கும் வள்ளலாருக்குமிடை ஒரு விவாதம் நடந்தது. சமஸ்கிருதமே தாய்மொழி என்றார் சங்கராச்சாரியார். வள்ளலார் அமைதியாக ஆயின் தமிழ் தந்தை மொழி ( பலத்த கரவொலி ) என்றார். தந்தை இல்லாத பெண்மைக்குப் பெருமை உண்டோ ? திருமூலர் திருமந்திரம் தமிழின் அறிவியல் நூல். பிறக்கும் குழந்தை முடமாக, குறைப்பிரசவமாக, அலியாக பிறக்கின்ற காரணத்தைச் சொல்லுகிறது திருமந்திரம். உலகப் பொது மறையாகக் கருதப்படவேண்டிய அற்புத வேதநெறி காட்டும் நூல் திருமந்திரம். ஒரு ஜீவனை சிவனாக்கி சிவ நிலைக்கு உயர்த்தி சிவநெறியை உருவாக்கித்தரும் மறை திருமந்திரம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என உணர்த்துவது திருமந்திரம். இந்த உயிர் உணர்வைப் பெற்றவர்கள் தமிழர்கள் . இதை உணர்ந்து உடல் கடந்து, உயிர் கடந்து, உளம் கடந்து தமிழா உன்னை உணர்ந்து தரணியையும் உயர்த்து “ என மகாமகரிஷி தம் உரையை நிறைவு செய்தபோது பார்வையாளர்கள் மெய்மறந்து அமர்ந்து உள்வாங்கியவர்களாக விளங்கினர்.


தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவிற்கு சுவைலிங்கம் தலைமை வகித்தார். நவம்பர் 12 ஆம் தேதி கோலாலம்பூர் ம.இ.கா. கட்டடம் நேதாஜி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பி.பி..சின்னதுரை கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமணீயனின் தெய்வக் குற்றம் சிறுகதை முதற்பரிசு பெற்றது. விழாவில் டத்தோஸ்ரீ சுப்பிரமணியம், டத்தோ ஸ்ரீ வேள்பாரி, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜய ராகவன், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர் போ.சத்தியமூர்த்தி முதலியோர் பங்கேற்றனர்.


- தினமலர் வாசகர் சொற்கோAdvertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)