வேவ் ரெசோனன்ஸ் ஈவென்ட்ஸின் பத்தாம் ஆண்டு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வேவ் ரெசோனன்ஸ் ஈவென்ட்ஸின் பத்தாம் ஆண்டு விழா

நவம்பர் 14,2017  IST

Comments

வேவ் ரெசோனன்ஸ் ஈவென்ட்ஸின் (WAVE RESONANCE EVENTS) பத்தாம் ஆண்டு விழா துபாய் ஷேக் ரஷீத் அரங்கத்தில்வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நடிகை ஜெயப்பிரதா, மசூலிப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் நாராயண ராவ், தெலுங்கானா முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் ஹனுமந்த ராவ் மற்றும் ஈநாடு குழும தொழில் முனைவர் ஷைலஜா கிரண் கலந்து கொண்டனர். விழாவை நோயல் சான், தெலுங்கு தொலைக்காட்சி கலைஞர் பிரபஞ்சன் தொகுத்து வழங்கினர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடனும், தொடர் கரவொலியுடனும் தொடர்ந்தவிழாவில் ஜி.வி.என். ராஜு வழங்கிய பலகுரல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக இருந்தது. மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ்உள்ளிட்ட பல தேசத்தலைவர்களின் குரலில் ராஜு பேசியது புதுமையாக இருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்பைபெற்றது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் சிவபாலாஜி, நடிகை ஸ்வப்னமாதுரி, நடிகர் மஹத்ராகவேந்திரா விழாவில் கலந்து கொண்டனர். பல தென்னிந்திய, வட இந்திய, அரேபிய பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பில் மக்கள் தங்களை மறந்து ஆழ்ந்துஇருந்தனர். நடன ஆசிரியை லட்சுமி வெங்கடேஷ், ஏ,பி,சி ,டி உள்ளிட்ட பல்வேறு நாட்டிய குழுக்கள் தமது சிறப்பானபங்களிப்பால் மாலை வேளையை மேலும் அழகாக்கினர். சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளில் ஏறத்தாழ மூன்று மணி நேரங்கள் தொடர்ந்தது. பாரம்பரிய முறைப்படி மேடைக்கு எடுத்துவரப் பட்ட வேவ் ரெசோனன்ஸ் ஈவென்ட்ஸின் பத்தாம் ஆண்டு மலரை நடிகைஜெயப்பிரதா வெளியிட மசூலிப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் நாராயண ராவ், தெலுங்கானா முன்னாள் ராஜ்ய சபாஉறுப்பினர் ஹனுமந்த ராவ் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் தொடர்ந்து உரையாற்றினர். விழா ஏற்பாடுகளை வேவ்ரெசோனன்ஸ் நிறுவனர்கள் ரமேஷ் பாபு ரவெல்லா, கீதா ரமேஷ் பாபு கவனித்துக்கொண்டனர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் கலந்து கொண்ட பெரும் தென்னிந்திய விழாவாக சிறப்பாகநடந்தேறியது.- தினமலர் வாசகர் பாலகிருஷ்ணன்.சு

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us