சிங்கப்பூர் தமிழறிஞருக்கு பாராட்டு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் தமிழறிஞருக்கு பாராட்டு விழா

நவம்பர் 17,2017  IST

Comments

சிங்கப்பூர் தமிழறிஞர், தேசியப் பல்கலைக் கழக பேராசிரியர் ( ஓய்வு ) சுப. திண்ணப்பன் சதாபிஷேக விழா அவர்தம் பிறப்பிடமான தேவகோட்டையில் வைதிக முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. அதனையொட்டி சிங்கப்பூரிலுள்ள 26 பிரதான தமிழ் அமைப்புக்கள் இணைந்து அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய திருமண அரங்கில் வாழ்த்து, பாராட்டு விழாவினை நவம்பர் 12 ஆம் தேதி கோலாகலமாக நடத்தின.

பக்தி இசைப் பாடல் கச்சேரியுடன் நிகழ்வு தொடங்கியது. பேராசிரியரை மூத்த எழுத்தாளர் ஏ.பி.ராமன், இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் ரா.தினகரன், இந்திய முஸ்லிம் லீக் தலைவர் நசீர்கனி, தமிழர் பேரவைத் தலைவர் பாண்டியன், தமிழாசிரியர் சங்கத் தலைவர் சாமிக்கண்ணு வாழ்த்துரை வழங்கினர். கவிஞர்கள் ந.வீ.விசயபாரதி, அ.கி.வரதராஜன் வாழ்த்துக் கவிதை வாசித்தனர். பேராசிரியரின் மலாய் மாணவர் தமிழில் கவிதை பாடினார்.

அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம், ருத்ர காளியம்மன் ஆலயம், வடபத்திர காளியம்மன் ஆலயம் முதலியவற்றிலிருந்து மேலாண்மைக் குழுவினர் வரிசை வழங்கிச் சிறப்பித்தனர். லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத் தலைவர் ராஜ்குமார் சந்திரா அமைப்பின் சார்பாக தங்க முலாம் பூசப்பட்ட திருவள்ளுவர் சிலையை அளித்து வாழ்த்தினார். முத்தாய்ப்பு நிகழ்வாக அரங்கம் நிறைந்த தமிழிலக்கியவாதிகளின் பலத்த கரவொலிக்கிடையே சிங்கப்பூர் தமிழ் அமைப்புக்களின் சார்பாக “ சிங்கை செந்தமிழ்ச் செம்மல் “ என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிறைவாக பேராசிரியர் திண்ணப்பன் ஏற்புரை ஆற்றினார். நிகழ்வினை தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் சுப.அருணாசலம் நெறிப்படுத்தினார்.

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)