பிரான்சில் இந்திய ராணுவவீரர்களுக்கு அஞ்சலி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில் இந்திய ராணுவவீரர்களுக்கு அஞ்சலி

நவம்பர் 18,2017  IST

Comments

நெவு சாப்பேல்: பிரான்சில் இந்திய ராணுவவீரர்களுக்கு அஞ்சலி தினம் 11/11/2017 அனுஷ்டிக்கப்பட்டது. இந்திய தூதுவர் வினாய் மற்றும் இந்தியாவின் முப்படை தளபதிகள் புடை சூழ, பிரான்ஸ் நாட்டின் ராணுவதளபதிகள், இப்போரில் பங்கு கொண்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டார்கள் உலகளாவிய வெளிநாடு வாழ் இந்திய வம்சாவழி இயக்கத்தின் ஐரோப்பா மற்றும் பிரான்ஸ் ப்ரங்கோ இந்தியா சங்கங்களின் சார்பிலும் கலந்துகொண்டார்கள்.

முதலாம் உலகப்போர் (1914-1918) நடந்தபோது இந்தியாவிலிருந்து குறிப்பாக வட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் கடல் வழியாக பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்சேல் துறைமுகத்திற்க்கு கொண்டுவரப்பட்டனர். அங்கிருந்து ரயில் வழியாக பல நகரங்களில் தங்கி, பாரிஸில் நடைபெற்ற விடுதலை நாளான 14 ஜுலை அன்று பாரீஸ் மாநகர வீதிகளில் ராணுவ அணிவகுப்புநடத்தினர்.

இறுதியில் பிரான்சுக்கு வட மேற்கில் நெவு சாப்பேல் என்ற இடத்தில்எதிரிப்படைகளை தாக்கி வீரமரணம் அடைத்தவர்களுக்கு, மற்றும் பிரான்ஸ் நாட்டிற்க்காக தங்களின் ரத்தத்தை சிந்திய இந்திய ராணுவத்தினருக்கு அங்கே கல்லறை அமைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் தேதி பல இந்தியர்கள் குடும்பங்களுடன் அங்கு சென்று நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.

- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)