இந்திய வம்சாவளியினருக்கு ஒரு வேண்டுகோள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இந்திய வம்சாவளியினருக்கு ஒரு வேண்டுகோள்

நவம்பர் 24,2017  IST

Comments
கான்பர்ரா: வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் தற்போது வைத்திருக்கும் இந்திய வம்சாவளியினர் அட்டைக்குப் பதில், வெளிநாட்டு இந்திய குடிமக்களுக்கான அட்டையை, டிசம்பர் 31 ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதரக அதிகாரி எஸ்.பஜாஜ் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது. அந்த தேதிக்குள் அட்டையை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் அட்டையை மாற்றிக் கொள்ளாவிட்டால், அதற்குப்பிறகு 275 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு சமமான உள்ளூர் கரன்சி செலுத்த வேண்டும்."மேலும் இனிமேல் கையால் எழுதப்பட்ட பயண ஆவணங்கள் செல்லாது; அவை ஏற்கப்படமாட்டாது. தற்போதுள்ள பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் அட்டைகள் கையால் எழுதப்பட்டவையாக உள்ளன. எனவே அதை வைத்திருப்பவர்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க இந்திய குடியேற்ற அதிகாரிகள் மறுக்க நேரிடும்.


எனவே இந்திய வம்சாவளியினர் தற்போது வைத்திருக்கும் வம்சாவளியினர் அட்டைக்குப் பதில் வெளிநாட்டு இந்திய குடிமக்களுக்கான அட்டையை, ஏற்கனவே பெற்றிரா விட்டால், உரிய காலத்திற்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

சிரியாவில் 35 ராணுவ வீரர்கள் பலி

டமாஸ்கஸ்: சிரியாவின் டெய்ர் அல்- சோர் மாகாணத்தில் உள்ள மயாதின் நகரில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் சிரியா வீரர்கள் 26 பேரும், ரஷ்ய வீரர்கள் 9 பேரும் ...

மே 27,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)