ஆக்லாந்தில் ஐயப்பன் பூஜை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் ஐயப்பன் பூஜை

டிசம்பர் 04,2017  IST

Comments

ஆக்லாந்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பனை வழிபட்டனர். கார்த்திகை முதல்தேதி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிக்கொண்டு இங்குள்ள கோவில்களுக்கு சென்று வருவது வழக்கமாக கொண்டுள்ளார்கள். இந்த வருடமும் மாலை அணிந்து விரமிருந்தவர்கள் ராகவன் குருஸ்வாமி தலைமையில் அவர் இல்லத்தில் நடந்த ஐயப்ப பூஜையில் கலந்து கொண்டு பஜனைகள் பாடி இருமுடி கட்டி அங்கிருந்து கிளம்பி அனைத்து கோயிலுக்கும் சென்று இறுதியாக பபாக்குராவில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று இருமுடியை இறக்கினர்.

பின் சந்துரு குருக்கள, ஐயப்பனுக்கு பால், பஞ்சாமிர்தம் மற்றும் நெய்யாபிஷேகம் செய்வித்தார். அச்சமயம் பக்தர்கள் ஐயப்பன் பாடல்களைப் பாடினர். பின் ஐயப்பனுக்கு மிக சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனையும் தொடர்ந்து ஆரத்தி காட்டிய போது சரணம் ஐயபபா என்ற கோஷம் செய்து பக்தி வெள்ளத்தில் மூழ்கினர். பக்தர்கள் அனைவரும் ஐயப்பனின் அருள் பெற்றனர். நிறைவாக ஹரிவாரசனம் பாடப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் மகாப்ரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

தஞ்சை, புதுகை மாவட்டத்தில் கனமழை

தஞ்சாவூர்: தஞ்சாவூர், புதுகை மாவட்டத்தில் மழை பெய்தது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ...

மே 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us