சிங்கப்பூரில் கார்த்திகை தீபத் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கார்த்திகை தீபத் திருவிழா

டிசம்பர் 05,2017  IST

Comments

சிங்கப்பூர் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அரோகரா கோஷம் முழங்க ஆயிரக் கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, ரதக் காவடி, அலகுக் காவடி எடுத்து பக்திப் பெருக்கோடு ஆடிப்பாடி ஆலயம் வந்து வழிபட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தியோரும் முடிக் காணிக்கை செலுத்தியோரும் ஏராளம்.

அதிகாலை 4.30 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. ஆறு மணிக்கு விநாயகப் பொங்கலிட்டு ஆலயத்தின் மேல் தளத்தில் அன்னக்கொடி ஏற்றப்பட்டது. நண்பகலில் மகேஸ்வர பூஜை செய்யப்பட்டு வாழை இலையில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. சுமார் 5000 க்கு மேற்பட்டோர் அன்னதானப் பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தனர்.

ஆலயத்திற்கு வெளியே பக்தர்களின் தாகம் தணிக்க கரும்புச் சாறு மற்றும் ரோஸ் மில்க் வழங்கப்பட்ட வண்ணமிருந்தன. காவடியை வடிவமைத்துக் கொடுக்க ஆலயத்திலேயே ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. பத்து மணி அளவில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தைப்பூசத் திருநாளில் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி ஆலயம் வலம் வந்து சர்வ அலங்கார நாயகராக அருள்பாலிக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கார்த்திகைத் திருநாளில் பல்லக்கில் பவணி வந்து மகா தீபம் ஏற்றியதையும் சொக்கப் பானையைக் கண்ணுற்றதையும் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த பக்தர்களைப் பார்த்தபோது மெய்சிலிர்த்தது.

ஆயிரக் கணக்கில் பக்தர்கள் குவிந்தபோதும் எவ்வித இடையூறுமின்றி தரிசனம் செய்யவும் அன்னதானத்தில் பங்கேற்கவும் ஏராளமான தொண்டூழியர்களை நியமித்து ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் ஏ.ஆர்.ராமசாமி தலைமையிலான குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். சிங்கப்பூரிலுள்ள மற்ற ஆலயங்களிலும் இந்துக்களின் இல்லங்களிலும் வழக்கமான உற்சாகத்துடனும் பாரம்பரிய முறைப்படியும் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டதைக் காண முடிந்தது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)