லண்டனில் தமிழ் குறும்படங்கள் வெளியீடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லண்டனில் தமிழ் குறும்படங்கள் வெளியீடு

டிசம்பர் 06,2017  IST

Comments

லண்டன்: லண்டன் Boleyn Cinema திரை அரங்கில் "ஒரு நொடி பொழுதில்" மற்றும் "காசு பணம் துட்டு மனி மனி" என்ற இரண்டு தமிழ் குறும் படங்கள்திரையிடப்பட்டன. 350 பார்வையாளர்கள் இரண்டு படங்களையும் கண்டு களித்தனர். நடிகர்கள் கிருஷ்ணா பாலசுப்ரமணியன், ராஜு பாய், ரஜ்னீஷ், டாக்டர் ரவி ஸ்ரீனிவாஸ், டாக்டர் அமரேந்திரா, ஜானகி ரெங்கநாதன், ஜானகி சொட்டாய், ஸ்வஸ்தா ஷங்கர், ஒளி பதிவாளர் அனந்த் பொன்னுசாமி, "காசு பணம் துட்டு மனி மனி" இயக்குனர் ஹேமந்த் கம்பம், "ஒரு நொடி பொழுதில்" இயக்குனர் மணிகண்டன் ராதாகிருஷ்ணன் ஆகியோரை இரண்டு படத்திலும் நடித்த கார்த்திக் ராகவன்அறிமுகம் செய்து வைத்தார்.

"ஒரு நொடி பொழுதில்" வாகனம் ஓட்டுவோருக்கு ஒரு விழிப்புணர்வு இருந்ததாகவும் அதை மிகவும் சவையாக சொல்லி இருப்பதாகவும், "காசு பணம் துட்டு மனி மனி" பணத்தின் மேல் மோகத்தில் இருக்கும் மூன்று பேரின் கதை, அதில் துரோகம், பொறாமை, வஞ்சகம், கோவம் ஆகியவற்றை மிக அருமையாக காட்டியிருப்பதாகவும் தெரிவித்த பார்வையாளர்கள், தரமான குறும் படங்களை பெரிய திரையில் பார்ப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்ததாக மகிழ்ந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

"ஒரு நொடி பொழுதில்" மற்றும் "காசு பணம் துட்டு மனி மனி" மிக விரைவில் youtube ல் வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் ஹேமந்த் அறிவித்தனர்.


- தினமலர் வாசகர் கார்த்திக் ராகவன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தான்சானியா தமிழ்ச் சங்கம்

தான்சானியா தமிழ்ச் சங்கம் ...

ஜனவரி 7 ம் தேதி தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2018

ஜனவரி 7 ம் தேதி தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2018...

ஜனவரி 13 ல் சிறந்த வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு

ஜனவரி 13 ல் சிறந்த வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு...

டிசம்பர் 8 ல் துபாயில் மாணவருக்கு உதவ கருத்தரங்கம்

டிசம்பர் 8 ல் துபாயில் மாணவருக்கு உதவ கருத்தரங்கம்...

Advertisement
Advertisement

தருண் தேஜ்பால் மீதானவழக்கு ஒத்தி வைப்பு

மும்பை: பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி இணைய தள பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான வழக்கை மும்பை ஐகோர்ட் ஒத்தி வைத்தது.2013-ம் ஆண்டு கோவா ஹோட்டல் ...

டிசம்பர் 13,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us