கோதன்பர்க் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கோதன்பர்க் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா!

டிசம்பர் 07,2017  IST

Comments

 மேற்கு ஸ்வீடன் வாழ் தமிழ் மக்களின் நலன் கருதி, நம் அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியை கற்கவும், பேசி பழகவும், மற்றும் தமிழ் மொழியின் புகழை ஸ்வீடன் நாட்டில் பரப்பவும், ஸ்வீடன் சிறப்பு விருந்தினர்கள் தலைமையில், தமிழ் மக்களால் கோதன்பர்க் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது.விழாவின் முக்கிய விருந்தினர்களாக கோதன்பர்க் நகர துணை மேயர் மரியா ஓய்வொடோவா, கோதன்பர்க் நகர சர்வதேச கலாச்சார இயக்குனர் குணிலா போக்மார்க் பங்குபெற்றனர். கோதன்பர்க் தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தர் சங்கரலிங்கம் வரவேற்க, சிறப்பு விருந்தினர்களை சங்கத் துணை தலைவர் ஆனந்த் அந்தோணி, பொருளாளர் அருணா குமரேசன் கௌரவித்தனர்.

விழாவில் நடனங்கள், சிறுவர் சிறுமியர் குறள் மற்றும் கவிதை ஒப்புவித்தல், வினாடி வினா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சங்கத்தின் சார்பாக அடுத்து பொங்கல் விழா நடைபெறும் என கூறிய, பொதுச்செயலாளர் பிரவீன் கார்த்திக் நன்றி கூறினார்.
கோதன்பர்க் தமிழ்ச் சங்கத்தை பற்றி அறிய, பார்க்கவும் இணையதள முகவரி
www.tamilsangam.se
மேலும் விவரங்களுக்கு அணுகவும் யாசர் அரபாத், செய்தித்தொடர்பாளர், கோதன்பர்க் தமிழ்ச் சங்கம் (கைபேசி எண்: +46 721 511 771, மின்னஞ்சல் முகவரி: gothenbergtamilsangam@gmail.com)


- தினமலர் வாசகர் யாசர் அராபத்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

இந்திய தூதருக்கு பாக்., சம்மன்

இஸ்லாமாபாத்: எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்கி வருவதாக கூறி, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மாதத்தில் 4வது ...

பிப்ரவரி 22,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)