நியூசிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூசிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

டிசம்பர் 12,2017  IST

Comments

 

ஆக்லாந்து: நியூசிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட்ம் களைகட்டத் துவ்ஙகியுள்ளது. எல்லா மேலை நாடுகளிலும் டிசம்பர் மாதம் கடும் குளிராக இருக்கும். பனிபொழிவாக இருக்கும. அதனால் கிறிஸ்துமஸை வொயிட் கிறிஸ்துமஸ் என்று அழைப்பார்கள். ஆனால் நியூஸிலாந்தில் மட்டும் சற்று எதிராக டிசம்பரில் கோடை காலம் ஆரம்பமாகும். அதனால் இங்கு வாழும் மக்கள் கிறிஸ்துமஸை மிகச்சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே கொண்டாட்டங்கள் ஆரம்பித்து எங்கு பார்த்தாலும் களைகட்டும். சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு எல்லா பகுதிகளிலும் நடக்கும். அந்த அணிவகுப்பு பார்க்க கண் கொள்ளா காட்சியாகும். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வித விதமாக அலங்கரித்துக்கொண்டு ஆட்டம்பாட்டத்துடன் செல்வது பார்க்க சிறப்பாக இருக்கும்.

இதில் குழந்தைகள் காப்பகத்தில் ஆரம்பித்து பெரிய நிறுவனங்கள் வரை பங்கு பெற்று அணி வகுத்து செல்வது சிறப்பு. இறுதியாக வரும் வண்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா பெரிய பை நிறைய இனிப்பு மிட்டாய்களை சாலையின் இரு ஓரமும் நின்று கொண்டிருக்கும் குழந்தைகள் முதல் அனைவருக்கும் வழங்குவது பார்க்க ரசிக்கும்படி இருக்கும். இந்த அணிவகுப்பு எல்லெர்ஸ்லி பகுதியில் நடந்தது. இந்நிகழ்ச்சி நவம்பர் இறுதியில் தொடங்கி ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துமஸ்க்கு இரு வாரம் முன்பு வரை நடக்கும்.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

ராஜஸ்தானில் ஒருவர் அடித்து கொலை

அல்வார்: ராஜஸ்தான் மாநிலம் அல்வார் கிராமத்தில் உள்ள பொது மக்கள் சிலர், அடையாம் தெரியாத இரண்டு பேர் பசுமடுகளை ஓட்டி செல்வதை பார்த்தனர். இதனையடுத்து,அவர்கள் மாடு ...

ஜூலை 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)