குவைத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின சிறப்பு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின சிறப்பு விழா

டிசம்பர் 12,2017  IST

Comments

குவைத்: குவைத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழாவை, ஸ்மார்ட் இந்தியன் பள்ளி அரங்கத்தில் நடத்தியது. சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜி.பாஸ்கரன் கலந்து கொண்டார். நமது பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி, தமிழ் தாய் வாழ்த்து மற்றும் இந்திய, குவைத் தேசிய கீதம் இசைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.

300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல், பாடல், இசை, நடனங்கள், வினாடி வினா, நாடகங்கள் அரங்கத்தை அதிர வைத்தன. குழந்தைகளாலேயே நடத்தப்பெற்ற நிகழ்ச்சிகளை குழந்தைகளே தொகுத்து வழங்கினர். சென்னை வேலம்மாள் பள்ளி முதல்வர் கோதண்டராமன் சிறப்புரை ஆற்றினார். க.புகழேந்திரன் தலைமை உரைக்கு முன் செயலாளர் நா.ராதாகிருஷ்ணன் வரவேற்க, நிறைவாக ரா.ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுக் கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்படடன. 2016- 17 பள்ளிப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

- தினமலர் வாசகர் சுப்பு

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2018

ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2018...

ஜனவரி 27 ம் தேதி பொங்கல் கிராமிய திருவிழா

ஜனவரி 27 ம் தேதி பொங்கல் கிராமிய திருவிழா...

பிப்ரவரி 3 ம் தேதி பொங்கல் திருவிழா

பிப்ரவரி 3 ம் தேதி பொங்கல் திருவிழா...

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா...

Advertisement
Advertisement

திருப்பூர் துணிக்கடையில் ஐடி ரெய்டு

திருப்பூர் : திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் இருந்து வந்த அதிகாரிகள் 3 ...

ஜனவரி 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us