இந்திய பெண்களுக்காக ஹாங்காங்கில் நிதி திரட்டும் நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இந்திய பெண்களுக்காக ஹாங்காங்கில் நிதி திரட்டும் நிகழ்ச்சி

டிசம்பர் 13,2017  IST

Comments

ஹாங்காங்: இந்திய பெண்கள் கல்வி மேம்பாட்டிற்காக, ஹாங்காங்கில் பெண்களால் உருவாக்கப்பட்டுள்ள, வி தி சொலுஷன் என்ற அமைப்பின் சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்களால், பெண்களைக் கொண்டே சய் யிங் புன் சமுதாய அரங்கில் நடத்தப்பட்ட, ராகமும் ரசனையும் என்ற இந்த நிகழ்ச்சிக்கு ஹாங்காங் மற்றும் மக்காவுக்கான இந்திய தூதர் புனீத் அகர்வால் தலைமை வகித்தார்.


ரூபா கிரணின் பரதநாட்டியம், ரூபா சாஸ்திரியின் கர்நாடக இசைக்கச்சேரி, மேனகா புர்ஸ்வாணி அமினின் கதக் நடனம், பூஜா லங்காணியின் பாலிவுட் நடனம் ஆகியவை அரங்கில் கூடியிருந்தவர்களைப் பரவசப்படுத்தின.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், இந்தியாவில் பெண்களுக்குத் தேவைப்படும் நிதி கிடைக்கிறது. ஏற்கனவே பெங்களூருவில் பார்வையிழந்த பெண்களுக்கு சகானா தொண்டு நிறுவனம் மூலமும், வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மகள்களுக்கு செகந்திராபாத் நர்சிங் பள்ளி மூலமும், விபச்சாரத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு தெலுங்கானா பிரஜாவாலா அமைப்பின் ஒத்துழைப்புடனும், இந்த அமைப்பு ஏற்கனவே கல்வி கற்பித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி, கூடுதலான இந்திய பெண்களுக்கு கற்பிக்க உதவியாக இருக்கும்.


- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)