மண்ணில் இந்த காதல்- ஆக்லாந்தில் ஒரு மெல்லிசை நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மண்ணில் இந்த காதல்- ஆக்லாந்தில் ஒரு மெல்லிசை நிகழ்ச்சி

டிசம்பர் 30,2017  IST

Comments

ஆக்லாந்து தமிழ் சங்கம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, பிரீமேன் கம்யூனிட்டி அரங்கில் மாலை 6 மணிக்கு 'மண்ணில் இந்த காதல் என்ற தலைப்பில் பின்னணி பாடகர் மலேஷியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனின் மெல்லிசை நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியை முரளி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ரத்னா வெங்கட்டின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மற்ற இசை அமைப்பாளர்களின் பிரபல பாடல்களை யுகேந்திரன் சிறப்பாக பாடி ரசிகர்களை இன்னிசை மழையில் மூழ்கடித்தார் . அவருடன் இணைந்தும் தனித்தும் சங்கர், ஸ்ரீசுதா, அசுவதி, ரவி முத்துமாணிக்கம் பாடல்களை பாடினர். ஆக்லாந்தில் சிறந்த மெல்லிசை பாடகரான ரவி முத்துமாணிக்கத்திற்கு இந்தியன் நியூஸ்லின்க் பத்திரிகை ஆசிரியர் வெங்கட்ராமன், 'இசை தென்றல்' என்ற விருதினை வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியின் இடையில் ரசிகர்களுக்கு இரவு உணவும் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோகுல்ராஜின் மிமிக்ரி மிகவும் அருமையாக இருந்தது. யுகேந்திரனும், வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியின் யு ட்யூபு சேனலும் இணைந்து நடத்திய 120 மணி நேரத்திற்குள் ஐந்து நிமிடத்தில் இயக்கிய குறும்பட போட்டியில் வென்ற பிரவீண்சிவராமன், விஷ்வா குழு மற்றும் உதயா குழு இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

ரசிகர்களுடன் உரையாடி ஒவ்வொரு ரசிகரின் விருப்பத்தை கேட்டறிந்து யுகேந்திரன் பாடியது மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது. நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஆக்லாந்து தமிழ் சங்கத் தலைவர் வை. ரவீந்திரனை யுகேந்திரன் பாராட்டி நன்றி கூறினார்.

- நமது செய்தியாளர் சந்திரா சஙகரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா...

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8...

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா...

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us