நியூசிலாந்து பாலாஜி கோயிலில் வைகுண்ட ஏகாதசி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூசிலாந்து பாலாஜி கோயிலில் வைகுண்ட ஏகாதசி

ஜனவரி 03,2018  IST

Comments

ஆக்லாந்து: நியூசிலாந்து பாலாஜி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ பாலாஜி கோயில் ஆக்லாந்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாமில்டன் என்ற நகரில் அமைந்துள்ளது. இதில் ஸ்ரீ பாலாஜி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் நவகிரஹங்கள் உட்பட எல்லா தெய்வங்களும் (கணேசர், சிவன், சுப்பிரமணியர் மற்றும் ஹனுமான்) உள்ளன. பாண்டுரங்கன் தலைமையில் அனைத்து பூஜைகளும் மிகச்சிறப்பாக நடந்து வருகின்றன. இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை மற்றும் ஆரத்தி நடத்தப்பட்டது. இந்த மார்கழி மாதத்தில் தினமும் திருப்பாவை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் நடைபெறுகிறது. பாண்டுரங்கன் மிக சிறப்பாக திருப்பாவையை எளிதான விளக்கங்களுடன் கூறி வருகிறார். ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஜனவரி முதல் தேதியன்று ஸ்ரீனிவாச கல்யாணம் சிறப்பாக நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கோயிலின் முகவரி : 2 Kent St, Frankton, Hamilton 3204Phone: 07-847 0266

Temple Hours: Monday, Tuesday, Thursday: 11am - 1pm and 5.30 pm - 7.30 pm. Wednesday: Closed for public. Friday:- 11am-1pm and 5.30 pm - 8.30 pm. Saturday:- 10am-1pm and 5.30 pm - 8.30 pm. Sunday:- 10am-1pm and 5.30 pm - 7.30 pm- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா...

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8...

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா...

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா...

Advertisement
Advertisement

ரயிலில் ஏற முயற்சித்த பயணி பலி

நெல்லை:நெல்லையில் ரயிலில் தொங்கியபடி பயணித்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார். திருச்செந்தூர்-சென்னை செல்லும் ரயிலின் முன்பதிவில்லாத பெட்டியில் தொங்கியபடி வந்தவர், ...

ஜனவரி 16,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)