பஹ்ரைனில் வெளிநாட்டு ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் துவக்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் வெளிநாட்டு ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் துவக்கம்

ஜனவரி 06,2018  IST

Comments

மனாமா (பஹ்ரைன்): வெளிநாட்டு ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் பஹ்ரைனில் துவங்கப்பட்டது. ஹோட்டல் ஜுப்பேர் கேட் உள்ளரங்கில் இன்று நடந்த விழாவில் மன்றம் குத்துவிளக்கேற்றி துவங்கப்பட்டு அதன் செயற்குழு அறிமுகம் செய்யப்பட்டது. தலைவராக நீலகிரியை சேர்ந்த சுரேஷ், பொது செயலாளராக சென்னையை சேர்ந்த இரமேஷ், பொருளாளராக குன்னூரை சேர்ந்த இரமேஷ் முத்தன், துணை பொது செயலாளராக நீலகிரியை சேர்ந்த சுதீர், உறுப்பினர் செயலாளராக கன்னியாகுமரியை சேர்ந்த ப்ரபின் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் பதவிக்காலம் மூன்று வருடங்கள்.

மன்றத் தலைவர் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் “அனைத்து ரசிகர்களையும் ஒரே குடைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ரஜினிகாந்தின் யோசனைகேற்ப இந்த மன்றம் பஹ்ரைனில் வாழும் அனைத்து மாநில ரஜினிகாந்த் ரசிகர்களுக்காகவும் துவங்கப்பட்டுள்ளது, இது பஹ்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு நற்பணிகளையும் சமுக சேவைகளையும் செய்யும் ஒரு அமைப்பாக அரசியல் சாயம் இல்லாமல் செயல்படும். விரைவில் ரஜினிகாந்த் பஹ்ரைன் வந்து தனது ரசிகர்கள் முன் தோன்றுவார்” என்று கூறினார்.

மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஷீனா கூறுகையில் “பஹ்ரைனில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்” என்று கூறினார். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து துவங்கப்பட்டுள்ள இந்த மன்றத்தால் பஹ்ரைனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இம்மன்றத்தில் இணையவும் உதவிகளை பெறவும் 33496859, 39335009, 33460999 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

- நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

சென்னையில் டீசல் விலை உச்சம்

சென்னை: சென்னையில், முதல் முறையாக, ஒரு லிட்டர் டீசல் விலை, 69 ரூபாயை தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை ...

ஏப்ரல் 22,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)