துபாயில் தமிழ் மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் தமிழ் மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஜனவரி 07,2018  IST

Comments

துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் நிருத்ய புவனம் சார்பில் அதன் இயக்குனர் புவனேஸ்வரி ரத்னம் மாணவி ஹரிணி ராமலிங்கம் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. விழாவுக்கு புவனேஸ்வரியின் குரு பாலா நந்தகுமார் தலைமை தாங்கினார். விசாலாக்ஷி ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,

புஷ்பாஞ்சலியில் துவங்கி கணபதி ஸ்துதியில் விநாயகரை துதித்து சப்தத்தில் பழனி முருகனை கண் முன்னே நிறுத்தினார் ஹரிணி . 'கானம் இசைத்து வருவாயோ' வர்ணத்தில் தர்மன் சூதாட்டத்தில் அனைத்தும் இழந்ததையும் , சபை நடுவே துடிக்கும் பாஞ்சாலியின் மானம் காத்த காட்சியும் கிருஷ்ணன் கர்ணனிடம் தானம் பெற்ற காட்சியும் மிக அற்புதமாக தான் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தத்ரூபமாக ஆடி சபையோர் அனைவரின் பாராட்டையும் பெற்றார் ஹரிணி. அவர் ஆடிய வேங்கடாச்சல நிலையம், காண வருவாரோ, நமோ நமோ கீர்த்தனங்கள் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பெற்றன.

குரு புவனேஸ்வரி ரத்னத்தின் நட்டுவாங்கமும் நடன அமைப்பும், ரோஷினி கணேஷ் பாடலும், முத்தரா ராஜேந்திரன் மிருதங்கமும், ஷங்கர் கணேஷ் வயலினும், பிரியேஷ் புல்லாங்குழலும் அழகுக்கு அழகு சேர்த்தன. குமாரி ஹரிணி ராமலிங்கம் எதிர்காலத்தில் ஒரு சிறந்த நடன கலைஞராக வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

சென்னையில் டீசல் விலை உச்சம்

சென்னை: சென்னையில், முதல் முறையாக, ஒரு லிட்டர் டீசல் விலை, 69 ரூபாயை தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை ...

ஏப்ரல் 22,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)