சிட்னியில் சுட்டெரிக்கும் வெயில்; 79 ஆண்டாக இல்லாத அதிகப்பட்ச கொடுமை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிட்னியில் சுட்டெரிக்கும் வெயில்; 79 ஆண்டாக இல்லாத அதிகப்பட்ச கொடுமை

ஜனவரி 07,2018  IST

Comments

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரை கடந்த 79 ஆண்டாக இல்லாத அதிகபட்ச வெயில் சுட்டெரிக்கிறது. சிட்னியின் மேற்குப்பகுதியில் மக்கள் 47.3 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அவதிப்பட்டனர். ரிச்மாண்டில் 46.3 டிகிரியும், கேம்ப்பல்டவுனில் 44.6 டிகிரியும் சிட்னி வானிலை மைய குன்றில் 43.4 டிகிரியும் வெயில் இருந்தது. 79 ஆண்டுகளுக்கு முன் 1939 ல் சிட்னியில் 47.8 டிகிரி வெயில் நிலவியது.

இந்த வெயில் கொடுமையைத் தாங்க முடியாத மக்கள் பெருமளவில் சிட்னி கடற்கரையில் குவிந்தனர். பெண்கள் பெரிய குடையுடன் பிக்னி உடையில் காணப்பட்டனர். இந்த வெயில் மேலும் தொடரும் என கூறப்படுகிறது.டென்னிஸ் வீராங்கனை பாதிப்பு

சிட்னியில் நடைபெற்று வரும் சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த கிறிஸ்டினா, வெயில் கொடுமை தாங்காமல் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.


மக்களை வெயில் கொடுமையில் இருந்து காப்பாற்ற தொண்டு நிறுவனங்கள் குடிநீர் வழங்கின. வெயிலால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த வெயில் கொடுமைக்கு விலங்குகளும் தப்பவில்லை. சிட்னியில் உள்ள டராங்கோ மிருககாட்சி சாலையில் நீர்யானைகளுக்கு ஐஸ்கட்டிகளில் பொதியப்பட்ட கேரட்களும், நீர் நாய்களுக்கு ஐஸ் கட்டிகளில் பொதியப்பட்ட இறால் மீன்களும் வழங்கப்பட்டன.


- தினமலர் வாசகர் சுந்தர்http://www.abc.net.au/news/2018-01-07/people-across-sydney-brave-the-heatwave/9309618

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

சென்னையில் டீசல் விலை உச்சம்

சென்னை: சென்னையில், முதல் முறையாக, ஒரு லிட்டர் டீசல் விலை, 69 ரூபாயை தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை ...

ஏப்ரல் 22,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)