பஹ்ரைனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் காங்கிரஸ் தலைவர் ராகுல்

ஜனவரி 08,2018  IST

Comments

மனாமா பஹ்ரைன்: காங்கிரஸ் தலைவர் ராகுல் முதல் முறையாக இன்று திங்கள்கிழமை பஹ்ரைன் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அவரது ஆதரவாளர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழில் புரியும் இந்திய வம்சாவழியினரின் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா மற்றும் மன்னர் குடும்பத்தினரையும் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் பஹ்ரைன் வாழ் இந்திய மக்களுக்கிடையே உரை நிகழ்த்துவார் என்று எதிபார்க்கப்படுகிறது. பஹ்ரைன் வாழ் இந்திய தொழில் அதிபர்களையும் சந்திக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் இந்தியாவின் சக்தியை உலகிற்கு எடுத்துக் கூறுபவர்கள், நீங்கள்தான் உண்மையான தூதர்கள். உங்களை சந்திக்க இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்றபின் அவர் செல்லும் முதல் வெளிநாடு என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை இந்தியா திரும்புகிறார்.

- நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

ஜார்கண்ட் தேர்தலில் பா.ஜ., வெற்றி

ராஞ்சி : ஜார்கண்ட மாநிலத்தில் ராஞ்சி, ஹசாரிபாக், ஆதித்யபூர், கிரிதிக் மற்றும் மெதினி நகர் ஆகிய 5 மாநகராட்சிகளுக்கு ஏப்.,16ல் தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை ...

ஏப்ரல் 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us