நியூஸிலாந்தில் வைரமுத்துவுக்கு கண்டனம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூஸிலாந்தில் வைரமுத்துவுக்கு கண்டனம்

ஜனவரி 13,2018  IST

Comments

 

ஹாமில்டன்: ஆண்டாள் குறித்து முரணான கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து நியூசிலாந்து, ஹாமில்டன் ஸ்ரீ பாலாஜி கோயிலில் நியூஸிலாந்தில் உள்ள அனைத்து இந்து மக்களின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ராஜபாளையத்தில் நடந்த கூட்டத்தில் ஆண்டாளை பற்றி வைரமுத்து பேசியது பெரிதும் கண்டிக்கத்தக்கது என்று கோயிலின் தலைமை அர்ச்சகர் பாண்டுரங்க பட்டாச்சார்யா கூறினார். அவர் மேலும் பேசுகையில், நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்தியால் தமிழை வளர்த்தனர். வைரமுத்துவின் இலக்கிய தமிழால் தமிழ் வளராது; பக்தி தமிழ் தான் தமிழை வளர்க்கும். வைரமுத்து வருத்தம் தெரிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது; ஆண்டாள் சன்னதியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதே போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் நாம் இந்த முறை காட்டும் எதிர்ப்பின் மூலம் பகுத்தறிவாளர்கள் உணர வேண்டும் என்றார். இந்த கண்டன கூட்டத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை வைரமுத்துவின் கூற்றுக்கு தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

தொகுதி பங்கீட்டில் இழுபறியா: நிதிஷ்

பாட்னா: பா.ஜ.வுடன் தொகுதி பங்கீடு ஒரு மாதத்திற்குள் முடிவு செய்யப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ. ...

ஜூலை 17,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)