தமிழ் உணர்வாளர்களின் உழவர் திருவிழா – 2018 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ் உணர்வாளர்களின் உழவர் திருவிழா – 2018

ஜனவரி 21,2018  IST

Comments

பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் இந்தியன் கிளப் இணைந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்திய “தமிழ் உணர்வாளர்களின் உழவர் திருவிழா – 2018” இந்தியன் கிளப் வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு விறகடுப்பில் மண் பானை பொங்கல் வைத்தல், பாரம்பரிய கலை நிகழ்சிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சங்க ஆதிப்பறை இசைக்குழுவினர் பறை இசை ஒலித்து விழாவை துவங்கிவைத்தனர்.

நமது பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோலப்போட்டி, கயிறு இழுத்தல், கயிறு தாண்டுதல், குளம் கரை, பாண்டியாட்டம், உறியடித்தல் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடை பெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை உணர்த்தும் விதத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு காளை போல் வேடமிட்டவர் தமிழரின் வீரத்தை எடுத்துரைத்தார். பஹ்ரைன் வாழ் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு கௌரவிக்கப்பட்டனர். விழாவில் கலந்துகொண்ட சுமார் இரண்டாயிரம் நபர்களுக்கு வாழை இலையில் பாரம்பரிய முறையில் உணவு பரிமாறப்பட்டது.

நிகழ்ச்சி பொறுப்பாளர் தூத்துக்குடியை சேர்ந்த செந்தில் கூறுகையில் “விழாவில் கலந்துகொண்ட அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது, சங்க செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறினார். சங்க பொருளாளர் மதிவாணன், ஊடகத்துறை செயலாளர் கார்த்திகேயன், விளையாட்டுத்துறை செயலாளர் முகமது பைசல், வளர்ச்சித்துறை செயலாளர் நித்யானந்தன், இலக்கியத்துறை செயலாளர் சுரேஷ், வேலை வாய்ப்புத்துறை செயலாளர் முகமது அபுசாலி, உறுப்பினர் நலத்துறை செயலாளர் பஞ்சு இராஜ்குமார் மற்றும் மங்கையர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்கள் ப்ரீதா, அனீஸ் பாத்திமா, அனிதா, ஜெயந்தி, ஹாஜிரா ஆகியோர் உடனிருந்தனர்.

- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

அனைத்து கட்சி கூட்டத்தால் பயனில்லை

புதுக்கோட்டை: பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கமல் பிரிக்கும் ஓட்டுகளால் திமுகவிற்கு தான் பாதிப்பு ஏற்படும். காவிரி குறித்து நேற்று நடந்த ...

பிப்ரவரி 23,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us