கேக் வெட்டி, இனிப்பு வழங்கி மதநல்லிணக்க பொங்கல் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கேக் வெட்டி, இனிப்பு வழங்கி மதநல்லிணக்க பொங்கல்

ஜனவரி 25,2018  IST

Comments

 

மொம்பாசா: ஆப்ரிக்க நாடான கென்யா மொம்பாசா நகரில் ‘’மொம்பாசா தமிழ் சங்கம்’’ சார்பில் மிலாடி நபி, கிறிஸ்துமஸ், ஆங்கில புது வருடம், மற்றும் பொங்கல் கொண்டாட்டம் என நான்கு விழாக்களும் ஹிந்து யூனியன் கடற்கரையில் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி, பொங்கலிட்டு நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் சங்கத் தலைவி கவிதா சந்திரசேகர் வரவேற்று, விழாவைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் மொம்பாசா தமிழ் நண்பர்கள், குழுவின் உறுப்பினர்கள் என அனைத்து மதத்தினரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். சங்க மகளிர் புதுப் பானையில் பொங்கலிட்டு, கிறிஸ்துமஸ் கேக் மற்றும் மிலாடி நபி இனிப்புகளை வழங்கி விருந்தளித்தனர். பொங்கல் விழா சிறப்பு அம்சமாக தஞ்சாவூர் சிவாஜி ராவ் தலைமையில் கரகம், மயில், பொய்க்கால் குதிரை ஆட்டங்களுக்கு இந்திய துணை தூதர் சஞ்சீவ் கந்தூரி ஏற்பாடு செய்திருந்தார். விழாவின் முடிவில் நமது தென்னிந்திய உணவு வழங்கப்பட்டது.

- தினமலர் வாசகி தீபா குமரகுரு

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ ...

Advertisement
Advertisement

நீட் தேர்வு: பிரதமரை சந்திக்க தயார்

சென்னை: நீ்ட் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோரை அனைத்து கட்சி தலைவர்களுடன் தி.மு.க., சந்திக்க தயார் என ஸ்டாலின் கூறினார். சைதாப்பேட்டையில் நடைபெற்ற ...

பிப்ரவரி 17,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)