லேகோஸ் நகரில் தமிழ்நாட்டு கிராமிய மணம் வீசிய தைத்திருநாள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லேகோஸ் நகரில் தமிழ்நாட்டு கிராமிய மணம் வீசிய தைத்திருநாள்

ஜனவரி 27,2018  IST

Comments

மார்கழி முடிந்து தை பிறந்த நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினர். லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வண்ணக் கோலம் மற்றும் கரும்புக்கு இடையில் பொங்கலிட்டு தமிழ்க்கடவுளாம் முருகனின் தரிசனத்தை பெற்று தை மாதம் முதல் தேதியை இனிதே துவங்கினர். அலங்கரித்த மண் பானையில் பாலிட்டு பொங்கல் கூவி தமிழர் திருநாளை முருகன் சன்னதிக்கு முன்சிறப்பாக துவங்கினர்.

தாய்நாட்டை விட்டு தொலைதூரம் இருந்தாலும் நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துக்காட்டுவதில் நைஜீரியா தமிழ் சங்கம் எப்பொழுதும் பெரும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது. இம்முறை அறுவடை திருநாளை நமது தமிழ்நாட்டின் கிராமிய வாசம் வீச இலுபேஜு பூங்காவில் மாதிரி கிராமம் வடிவமைத்து அதில் ஆடவர், பெண்டிர் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி தமிழ் நெஞ்சங்களை குதூகலப்படுத்தியது நைஜீரியா தமிழ் சங்கம்.

பூங்கா வாசலில் வண்ணக்கோலம் போட்டு குலை தொங்கிய வாழைமரத்துடன் தமிழ் நெஞ்சங்களை அன்புடன் வரவேற்றது. ஆண்களுக்கான கபடி போட்டியில் துவங்கி, பெண்கள் கும்மி, ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும் குழந்தைகளுடன்கரகாட்டம் என நமது மண்ணிற்கே உரித்தான பொக்கிஷங்களை எடுத்துக்காட்டினர். குழந்தைகள் சாக்குப் போட்டி, மெது மிதிவண்டி, கோழி பிடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என அனைத்தும் விளையாடி ஒரு புதிய பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே கயிறு இழுக்கும் போட்டி மற்றும் பானை உடைக்கும் போட்டியும் நடந்தது.

மார்கழி மாதம் முழுதும் வீட்டு வாசலில் வண்ணக்கோலம் போட்டு அக்கம் பக்கத்து வீட்டினிடையே போட்டிக்களமாக பார்ப்பது நமது தமிழ் நாட்டு பெண்களின் இயற்கை. வெளிநாட்டில் வாழும் தமிழ் பெண்கள் இதனை அனுபவிக்கும் வகையில் கோலப்போட்டியும் ஏற்பாடாகி இருந்தது. விளையாட்டு மற்றும் ஆட்டம் அனைத்தும் நடந்தேறியது. எனினும் பாட்டு, இசை இல்லாமல் பொங்கலோ பொங்கல் நிறைவேறாது அல்லவா? மகளிர் மற்றும் ஆடவர் இடையில் எசப்பாட்டும் பாடி நெஞ்சம் மகிழ்ந்தனர்.

பொங்கிய பொங்கல் போல் உள்ளம் இனித்திட மகிழ்ச்சி பெருகிட உடல் வலிமையோடு புத்தி கூர்மை பெற்று தெளிவான எண்ணம் வயப்பட அனைத்து உலக தமிழர்களுக்கும் நைஜீரியா தமிழ் சங்கம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ ...

Advertisement
Advertisement

நீட் தேர்வு: பிரதமரை சந்திக்க தயார்

சென்னை: நீ்ட் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோரை அனைத்து கட்சி தலைவர்களுடன் தி.மு.க., சந்திக்க தயார் என ஸ்டாலின் கூறினார். சைதாப்பேட்டையில் நடைபெற்ற ...

பிப்ரவரி 17,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)