லேகோஸ் தைப்பூச திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லேகோஸ் தைப்பூச திருவிழா

பிப்ரவரி 07,2018  IST

Comments

லேகோஸ்: ஜனவரி 31ம் தேதி தைப்பூச வழிபாடு லேகோஸில் சிறப்பாக நடந்தேறியது. நமது லேகோஸ் முருகன் கோவிலில் காலை 10 மணிக்கு துவங்கிய சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து அர்ச்சனை, ஆரத்தி, லங்கர் பிரசாதம் வரை முருகன் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கக்கவசத்தில் ஜொலித்துக்கொண்டுருந்த முருகன் அருள் வேண்டினர். ஸ்ரீ வைரவன் பட்டர் அவர்கள் தைப்பூசத்தின் மகிமையை உணர்த்தும் சிறிய உரை அளித்தார்.

5வது வருடமாக தை மாதம் விளக்கு பூஜை, மூன்றாவது தை வெள்ளிக்கிழமையான நேற்று மிகவும் பக்தியுடன் சிறப்பாக நடத்தேரியது. இராகு காலத்திற்கு சற்றே முன்பாக துவங்கிய இந்த பூஜை சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்தது. சுமங்கலிகள் காமாட்சி/குத்து விளக்கிற்கு அலங்காரம் செய்து மனையில் அமர்த்தி வைத்திருந்தனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அஷ்டோத்திரம் படித்து தத்தம் விளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்தார்கள். தங்கள் குடும்பத்தில் அமைதி, செல்வம் நிலைத்திட - நல்லன்பு, ஒழுக்கம் நல்கிட- விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்கிட சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. 12 மணி அளவில் மஹா நைவேத்தியம் செய்யப்பட்டு துர்க்கைக்கு அர்ச்சனையும் ஆரத்தியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்பட்டது. இம்முறை இவ்வைபவத்தில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் இந்தியாவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட சுபமங்களத்தின் அடையாளமான வளையல்கள் வழங்கப்பட்டது சிறப்பம்சமாக விளங்கியது.

ஸ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ ...

Advertisement
Advertisement

நீட் தேர்வு: பிரதமரை சந்திக்க தயார்

சென்னை: நீ்ட் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோரை அனைத்து கட்சி தலைவர்களுடன் தி.மு.க., சந்திக்க தயார் என ஸ்டாலின் கூறினார். சைதாப்பேட்டையில் நடைபெற்ற ...

பிப்ரவரி 17,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)