மலேசியாவில் 'டெஸ்லிங் தமிழச்சி' கலை விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் 'டெஸ்லிங் தமிழச்சி' கலை விழா

பிப்ரவரி 08,2018  IST

Comments

கோலாலம்பூர் : மலேசியாவில் டத்தோ மாலிக் (டத்தோ அப்துல் மாலிக் பின் தஸ்திகீர்) தலைமையில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் பெண்களுக்கான சிறப்பு "டெஸ்லிங் தமிழச்சி" கலை விழாவை கோலாலம்பூரில் பிப்ரவரி 3 ம் தேதி கேஎல்சிசி பிளேனரி ஹாலில் பிரமாண்ட பொருட்ச்செலவில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாபெரும் அரங்கில் இந்நிகழ்ச்சியே முதல் இந்திய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் முக்கிய மையப்புள்ளியாக கலை நிகழ்ச்சிகள் மூலம் மலேசியா மற்றும் இந்தியா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவேண்டும், மலேசிய கலை மற்றும் சினிமா துறை மீது உலகின் பார்வை திரும்பவேண்டும். மேலும் மலேசிய பிரதமரின் நோக்கமான மலேசியா சர்வதேச திரைப்பட துறையின் முக்கிய மையமாக விளங்கவேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக மலேசிய கூட்டாட்சி பிரதேசங்களின் துணை அமைச்சர் டத்தோ லோக பாலா ( Dato' Loga Bala Mohan Jaganathan, Deputy Minister of Federal Territories), மலேஷிய விளையாட்டு மற்றும் இளைஞர் துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன்( Dato' Saravanan Murugan, Deputy Minister of Youth and Sports), மற்றும் மலேஷியா நிதி அமைச்சின் கருவூல செயலாளர் தான் ஸ்ரீ மொஹாமட் இர்வான் செரிக்கர் (Tan Sri Dr Mohd Irwan Serigar, Secretary General of Treasury, Ministry of Finance, Malaysia) ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அமலாபால், ப்ரனிட்டி, ராய் லட்சுமி, ஹன்சிகா, ஆண்ட்ரியா, தேவதர்ஷினி, கவிதா ரவீந்திரன், இனியா, பூர்ணா, ரம்யா, சஞ்சனா சிங், ஐஸ்வர்யா தத்தா, வைஷாலி, சாக்ஷி அகர்வால் மற்றும் மலேசிய முன்னணி பெண் பாடகர் புனிதா ராஜா, தர்ஷினி ஈஸ்பரன் மற்றும் சிந்திஹசனே ஆறுமுகம் கலந்து கொண்டு பாடல், நடனம், நகைச்சுவை மற்றும் பேஷன் ஷோக்கள் நிகழ்த்தி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

மலேசிய அர்டான ஹரன் நிறுவன இயக்குனர், பேஷன் டிசைனர் மற்றும் ஒப்பனை கலைஞரான ஹரிஹரன் அரசு இயக்கத்தில் சிறப்பு பேஷன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. மலேசிய விஹார ஆர்ட்ஸ் நிறுவனர் மற்றும் நடன இயக்குனர் குணரத்தம் வேலாயுதம் நடன நிகழ்ச்சிகலை இயக்கினார். ஏராளமான மலேசிய நடன கலைஞர்கள் மற்றும் கலை துறை சார்ந்தவர்கள் தொடக்கம் முதல் முடிவுவரை அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் பங்காற்றினர்.

நிகழ்ச்சியில் ஐந்து மலேசிய தொண்டு நிறுவனங்களுக்கு தலா பத்தாயிரம் மலேசிய ரிங்கிட் அடிப்படையில் நன்கொடை மொத்தம் ஐம்பதாயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டத்தோ மாலிக் தலைமையில், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.
-நமது செய்தியாளர் வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

தூத்துக்குடி: ரயில்கள் மீண்டும் இயக்கம்

துாத்துக்குடி: துாத்துக்குடியிலிருந்து வெளி ஊர்களுக்கு ரயில்கள் இயங்கத் தொடங்கின. துாத்துக்குடியிலிருந்து மைசூரு விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலிக்கு ...

மே 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)