சிங்கப்பூரில் ஆன்மிக உரை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஆன்மிக உரை

பிப்ரவரி 09,2018  IST

Comments

  சிங்கப்பூர் : சிங்கப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சாரதா அரங்கில், சிகாகோ விவேகானந்தா வேதாந்த சொசைட்டி தலைவர் சுவாமி இஷத்மாநந்தாஜி மகராஜ் ஆறு நாட்கள் பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ச தேவரின் உபதேச மொழிகள் பற்றித் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தமதுரையில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் உரைகள் வேத வாக்கியங்களாக, ஐந்தாவது வேதமாக விளங்குகிறது என்பதைப் பல நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி விளக்கினார் . வாழும் தெய்வமாக விளங்குகிறார் என்பதைத் தமது அனுபவத்திலிருந்து எடுத்துரைத்தார். இவர் 2013 ஆம் ஆண்டு சிகாகோ செல்லுமுன் புருலியா ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சொசைட்டியைத் துவக்கி அதன் தலைவராகவும் விளங்கினார். அந்தமான் , போர்ட் பிளேர் பகுதிகளில் இயலாதோர், ஆதரவற்றோர் மற்றும் விதவைகள் மறுவாழ்வுக்கான இல்லம் அமைத்தார். அருணாசல பிரதேசத்திலுள்ள நரோட்டம் நகரிலுள்ள பள்ளி முதல்வராகவும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார். இவர் கொல்கத்தா அத்வைத ஆசிரமத்தில் ஆற்றிய பகவத் கீதைச் சொற்பொழிவுகளடங்கிய உரை 14 டி வி டி-க்களாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது. சுவாமி புத்தானந்தாஜி மகராஜ் எழுதிய “ மனமும் அதன் கட்டுப்பாடும் “ என்ற நூலை பெங்காலியில் இவர் மொழி பெயர்த்துள்ளார். இது மிகவும் பிரபலமாக விளங்குகிறது. சிங்கப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி விமோக்சாநந்தாஜி மகராஜ் வரவேற்புரை ஆற்றினார். மிஷனைச் சேர்ந்த பள்ளிகளுக்கும் விஜயம் செய்து மாணவர்களை ஆசிர்வதித்தார். இவர்தம் தொடர் சொற்பொழிவைப் பெருந் திரளான ஆன்மிக அன்பர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர்- 2

மல்லிகை மலர்- 2...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்...

மல்லிகை மலர்

மல்லிகை மலர்...

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்...

Advertisement
Advertisement

புனித நூல்களை எரிக்க முயன்ற 2 பேர் கைது

புதுடில்லி : டில்லி இந்தியா கேட் பகுதியில் ஆக., 15 அன்று, பைபிள், கீதை, குரான், குரு கிராத் சாகிப், இந்திய அரசியலமைப்பு உள்ளிட்ட நூல்களின் பிரதியை எரிக்க முயன்ற 2 பேரை ...

ஆகஸ்ட் 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us