மலேசியாவில் ஆய்வுக் கட்டுரை பயிற்சிப் பட்டறை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் ஆய்வுக் கட்டுரை பயிற்சிப் பட்டறை

பிப்ரவரி 09,2018  IST

Comments

  கோலாலம்பூர் : புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் (புத்தகம்) பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஆய்வுக் கட்டுரை எழுதுவிக்கும் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தலைநகர் கோலாலம்பூரில் உள்ள கிரேண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் இரு நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் 38 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பங்கேற்பாளர்கள் முதுகலை, முனைவர் பட்ட ஆய்வாளர்களும் இளங்கலை மாணவர்களும் விரிவுரையாளர்களும் ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர் என்று புத்தகத்தின் செயலாளர் தினேஸ்வரி குறிப்பிட்டார். 2018 ம் ஆண்டிற்கான முதல் நிகழ்ச்சியாக புத்தகம் இப்பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. இப்பட்டறையை இணைப்பேராசிரியர்கள் பாலமுரளிதரா பாலகிருஷ்ணனும், முகமட் நோர் அஸாரி அஸ்மானும் சிறப்பாக வழிநடத்தினர்.

இவர்களது வழிகாட்டலில் ஓர் ஆய்வை அறிவியல் பூர்வமாகவும் சரியான நெறிமுறைகளுடனும் எவ்வாறு எழுதுவது என்பதை ஆறு அமர்வுகளில் சிறுசிறு தலைப்புகளில் பகுத்து வழிநடத்தினர். ஆய்வுகளுக்குப் பெரிதும் துணைபுரியக்கூடிய அதே வேளையில் பலரும் அறிந்திருக்காத மெண்டெலே போன்ற இலவச மென்பொருள்களையும், ரிசேர்ச் கேட் போன்ற வலைத்தளங்களையும் அறிமுகம் செய்ததோடு மட்டுமில்லாமல் அவற்றில் இலவச பதிவும் செய்வித்து, பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. முதலில் 30 பேருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த இடம் அதிக வேண்டுகோளுக்குப் பிறகு மேலும் 8 பேருக்கு மட்டும் அதிகப்படுத்தப்பட்டது என்று பட்டறையின் இயக்குனர் முனைவர் முனீஸ்வரன் தெரிவித்தார். புத்தகத்தின் தலைவருமான அவர் இதுபோன்ற பட்டறை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதால் இனி வரும் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

அமைச்சர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க அலுவலகத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்பட ...

பிப்ரவரி 23,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us