ஆஸி.,யில் இந்துக்கள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆஸி.,யில் இந்துக்கள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு

பிப்ரவரி 09,2018  IST

Comments

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 5 ஆண்டுகளில் இந்துக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு புள்ளிவிபர கழகம் தெரிவித்துள்ளது.
60 சதவீதம்:
புள்ளிவிபர கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி 2011 முதல் 2016ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய இந்துக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்து, 4,40,300 ஆக உள்ளது. இதே கால இடைவெளியில் மற்ற மதத்தினரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினரை தொடர்ந்து அதிகமானவர்கள் பின்பற்றும் 4வது பெரிய மதமாக இந்து மதம் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்துக்களின் சராசரி வயது 31. 92 சதவீத இந்துக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். 81 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.
ஆஸி.,யில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக சர்வதேச இந்துக்கள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ராஜன் ஜெத் கூறுகையில், பல்வேறு கவன சிதறல்களுக்கு இடையே தொடர்ச்சியான கடின உழைப்பு, உயர்ந்த நன்னெறி, கல்வி, திருமண உறவுகள் போன்றவைகளே இந்து கலாச்சாரத்தின் மதிப்புகளை காத்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.
இந்துக்கள் உள்ளார்ந்த தேடுதல், தூய்மை, நூல்களின் பரந்த ஞானத்தை ஆராய்தல், இளைஞர்களையும் குழந்தைகளையும் ஆன்மிக பாதையில் வழி நடத்துவது, பேராசைகளில் இருந்து விலகி இருப்பது, இறை சிந்தனையை வாழ்வில் கடைபிடிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
- சர்வதேச இந்து மத தலைவர் ராஜன் ஜெத்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 748 கனஅடியில் இருந்து 529 கனஅடியாக குறைந்துள்ளது. நீர் மட்டம் 32.98 அடியாகவும், நீர்இருப்பு 8.76 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் ...

மே 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us