ஒமாகா நகரில் இந்திய குடியரசு தின விழா: உற்சாக கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஒமாகா நகரில் இந்திய குடியரசு தின விழா: உற்சாக கொண்டாட்டம்

பிப்ரவரி 10,2018  IST

Comments

அமெரிக்கா, நெபராஸ்க மாகாணத்தில், ஒமாகா நகரில் இந்திய அசோசியேஷன் ஆப் நெபராஸ்க , ஒமாஹா ( IAN - India Association of Nebreska, Omaha) அமைப்பின் சார்பாக இந்திய குடியரசு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

டக்ளஸ் கவுன்டி கமிஷனர் மேரி ஆன் பொர்கெசன் சிறப்பு விருந்தினராக கலந்தது கொண்டு இந்திய மற்றும் அமெரிக்க நாட்டு தேசிய கொடிகளை ஏற்றினார். IAN அமைப்பின் தலைவர் மாலதி பாலு வரவேற்ப்புரை ஆற்றினார்.

குழந்தைகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள், தேசப்பற்று பாடல்களுக்கு நடனம், இந்திய கலாச்சார நடனம் என கலைநிகழ்ச்சிகள் அருமையாக அமைந்தன. குழந்தைகளுக்கான மாறுவேட போட்டியில் இந்திய தேசிய தலைவர்கள் போன்று சிறப்பாக வேடமணிந்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள்வழங்கப்பட்டன.

சிறப்பாக பங்களித்த உறுப்பினர்களுக்கு IAN அமைப்பின் சார்பாக சிறப்பிக்கப்பட்டனர். இந்திய மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இந்திய குடியரசுதினத்தினை சிறப்பாக கொண்டாடினர்.

IAN அமைப்பின் இணையதள முகவரி: http://www.indiaassociationofnebraska.org/Welcome.aspx

-- நமது நிருபர் சிதம்பரநாதன் அழகர், ஒமாகா 

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)