மொரிஷியஸ் நாட்டில் தைபூச திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மொரிஷியஸ் நாட்டில் தைபூச திருவிழா

பிப்ரவரி 10,2018  IST

Comments

மொரிஷியஸ் நாட்டில் தைபூச திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. போர்ட் லூயிஸ் நகரில் உள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில், காலை முதல் பக்தர்கள் தங்களுடைய காவடிகளுடன், குடும்பம் குடும்பமாக குவிய தொடங்கினர். காலை, 9 மணிக்கு பூஜை புனஸ்கரங்களுடன் அரோகரா அரோகரா என்னும் முழக்கம் விண்ணை தொட, காவடி ஊர்வலம் தொடங்கியது. போர்ட் லூயிசில், ரேஸ் கோர்ஸ் அருகே உள்ள திரு மலையில் வீற்று இருக்கும் அருள்மிகு பால தண்டாயுத பாணி சுவாமி திருக்கோவிலில், பக்தர்கள், மலை ஏறி, காவடி சுமந்து வந்து தங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். அன்று, மொரிஷியஸ் முழுவதும், அரசு விடுமுறை. பக்தர்கள் செல்லும் வழி எங்கும், தீ அணைப்பு துறையினர் சாலை முழுவதும், நீர் பாய்ச்சி, நடப்பதற்கு ஏதுவாக, குளிர்வித்தனர். கோவில்களில் குழுமியிருந்த அனைத்து பக்தர்களுக்கும், பானகம் பிரசாதங்கள் மற்றும் மதிய உணவிற்கும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனர்

- தினமலர் வாசகர் ஆர். வி. பாஸ்கரன்




Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ ...

Advertisement
Advertisement

நீட் தேர்வு: பிரதமரை சந்திக்க தயார்

சென்னை: நீ்ட் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோரை அனைத்து கட்சி தலைவர்களுடன் தி.மு.க., சந்திக்க தயார் என ஸ்டாலின் கூறினார். சைதாப்பேட்டையில் நடைபெற்ற ...

பிப்ரவரி 17,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)