சிங்கப்பூரில் திருவிளக்கு பூஜை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் திருவிளக்கு பூஜை

பிப்ரவரி 23,2018  IST

Comments

சிங்கப்பூர் விவேகானந்தா சேவா சங்க பாரதி கிளையின் சார்பாக காமன்வெல்த் அருள்மிகு முனீஸ்வரன் ஆலயத்தில் மங்கள மகளிர் 108 பேர் அமர்ந்து வேத மந்திரங்கள் ஓத, திருவிளக்கு பூஜை நடத்தியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வசந்த மண்டபத்தில் ஆலயத் தலைமை அர்ச்சகர் வழிகாட்ட பக்திப் பரவசத்தோடு கலந்து கொண்ட பெண்கள் திருவிளக்குப் பூஜையில் ஈடுபட்டனர். கலந்து கொண்ட பெண்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. உலக அமைதி வேண்டியும், பொருளியல் மேம்பாட்டிற்காகவும், கல்வி அபிவிருத்திக்காகவும், குடும்ப ஒற்றுமை மற்றும் செழிப்பிற்காகவும் இத்தகு கூட்டு வழிபாட்டினை விவேகானந்தா சேவா சங்க பாரதி கிளை மாதந்தோறும் ஏற்பாடு செய்து வருகிறது. பெண்களும் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர். இது தவிர யோகாசன வகுப்புக்கள், ஆங்கில இந்தி சமஸ்கிருத வகுப்புக்களையும் சங்கம் நடத்தி வருகிறது. ஆன்மிகப் பணியாக தேவார, திருவாசக, பகவத் கீதை வகுப்புக்களையும் நடத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இது தவிர பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் நடத்துவதோடு தக்க அறிஞர்களைக் கொண்டு கலந்துரையாடல் நிகழ்வுகளையும் அவ்வப்போது நடத்துகிறது. குறிப்பாகச் சொல்லுமிடத்து இவ்வட்டாரப் பகுதியில் சிறந்த சேவா அமைப்பாகத் திகழ்கிறது எனலாம்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி; ஐம்பெரும் விழா

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி; ஐம்பெரும் விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில்

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில் ...

Advertisement
Advertisement

அரசியலில் இருந்து விலகி இருக்கிறோம்

புதுடில்லி: அரசியலில் இருந்து ஆர்.எஸ்.எஸ். விலகியே இருக்கிறது என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசினார்.

எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். 3 ...

செப்டம்பர் 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)