நியூ இங்கிலாந்தில் மாபெரும் பொங்கல் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூ இங்கிலாந்தில் மாபெரும் பொங்கல் விழா

மார்ச் 04,2018  IST

Comments

 அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள நியூஇங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தில் (நெட்ஸ்) பிப்ரவரி 03 ம் தேதி மாபெரும் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள், மானுடம் குழுவின் பறை நிகழ்ச்சி உள்ளிட்ட 51 க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகரும் சினிமா இயக்குனருமான கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பாக்யராஜ் தலைமையில், 'குடும்ப வாழ்வில் எது அதிக ஆனந்தம்?' - மனைவி சொல்லே மந்திரம் என கணவன் நடப்பதில்; கணவன் கிழித்த கோட்டை தாண்டாமல் மனைவி நடப்பதில் என்ற தலைப்பில் நடந்த நகைச்சுவை விவாத நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஹார்வர்டு தமிழ் இருக்கை புகைப்பட மையம் அமைக்கப்பட்டிருந்ததும், அனைவரும் தமிழரின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டதும் விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. சுமார் 9 மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற பொங்கல் விழாவில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது பலரையும் பிரம்மிக்க வைத்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டது.



Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ

ராஜபாளையம் : ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலையில் 2வது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. ராஜாம் பாறை, அய்யனார் கோயில் பகுதிகளில் 2வது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை ...

ஜூன் 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us