சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்

ஏப்ரல் 05,2018  IST

Comments

சிலப்பதிகாரப் பூம்புகாரில் சித்திரைப் பெருவிழா ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோலாகலமாக நடைபெற்றதை இலக்கியங்களில் படித்திருக்கிறோம். இன்றைய பூம்புகாராக விளங்கும் சிங்கப்பூரில் ஒரு மாத காலம் தமிழ் மொழி விழா , அரசு ஆதரவுடன் வளர் தமிழ் இயக்கம் , சிங்கப்பூரின் பிரதான தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இதன் தொடக்க விழா சிங்கப்பூர் தொலைக்காட்சிவழி நேரலையாக மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.வர்த்தக- தொழில் அமைச்சர் எஸ் . ஈஸ்வரன் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டார் . கற்றல்- வளர்ச்சிக் குழுத் தலைவரும் நாடாளு மன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர், இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் ஜெயச்சந்திரன் , நாடாளு மன்ற நியமன உறுப்பினர் தனலட்சுமி , வளர் தமிழ் இயக்கத் தலைவர் ராஜாராம் முதலியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . சிறப்பு விருந்தினர் ஈஸ்வரன் தமது உரையில் பன்னிரண்டாவது ஆண்டாக நடைபெறும் இவ்விழா ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கையிலும் தரத்திலும் உயர்ந்து வருகிறது என்றும் இளையர் - மாணவர் மத்தியில் பெரும் பங்களிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார். வளர் தமிழ் இயக்கத் தலவர் ராஜாராம் நமது செய்தியாளரிடம் கூறும் போது , திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பயிற்சி பெற்று, நடிப்பு, இயக்கம் , படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் இளையர்,அதிதி, இவாண் ஆர்ட்ஸ் போன்றவற்றில் பங்கு பெற்று இந்த ஆண்டு ஒளவையார் போன்ற நிகழ்ச்சிகள் படைக்கவிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இவ்வாண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய,ஆய்வு , இசை, பட்டி மன்றங்கள் ,சுழலும் சொற்போர், முத்தமிழ் விழா, திருக்குறள் விழா, அறிவியல் தமிழ், தொழில் தொடங்க ஆலோசனை என, மாணவர், இளையோர் , ஆய்வாளர் , பொது மக்கள் எனப் பல்தரப்பினருக்கும் பல்சுவை விருந்தளிக்கவுள்ளதை விளக்கினார் . ஒரு மாத காலம் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்கலாம் என்றார்.

தொடக்க விழா நிகழ்ச்சியை கார்த்தி, ஷாலினி, ஜெய் கணேஷ் ஆகியோர் நெறிப்படுத்தினர். சிங்கப்பூர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)