சிங்கப்பூரில் திருக்குறள் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் திருக்குறள் விழா

ஏப்ரல் 05,2018  IST

Comments

சிங்கப்பூர் :“தமிழை நேசிப்போம்- தமிழில் பேசுவோம்” என்ற முழக்கத்தோடு , பன்னிரண்டாவது ஆண்டாக , அரசு ஆதரவுடன் வளர் தமிழ் இயக்கம், ஏப்ரல் மாதம் முழுவதும் நடத்தும் தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக , தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் திருக்குறள் விழாவை , உமறுப் புலவர் தமிழ் மொழி மன்ற அரங்கில் மிகச் சிறப்பாக நடை பெற்றது. மன்றத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ் வாழ்த்துடன் விழா தொடங்கியது. இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் இரா. தினகரன் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டு , திருக்குறள் ஒப்புவிப்புப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்குப் பரிசு வழங்கி கவுரவித்தார். விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக பத்மினி குருபாலனுக்கு இவ்வாண்டுக்கான குறள் விழா விருதளித்து கவுரவிக்கப்பட்டது. நிறைவாக அரங்கம் நிறைந்த இலக்கிய ஆர்வலர்களின் பலத்த கரவொலிக்கிடையே தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பர்வின் சுல்தானா சிறப்புரை ஆற்றினார். செயலாளர் நன்றி நவில விழா நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)