சிங்கப்பூரில் முத்தமிழ் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் முத்தமிழ் விழா

ஏப்ரல் 09,2018  IST

Comments

சிங்கப்பூர் : தமிழ் மொழி விழாவையொட்டி , சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் , தனது முத்திரைத் திருவிழாவாக , முத்தமிழ் விழாவை , ஏப்ரல் 7 ஆம் தேதி , உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் கோலாகலமாக நடத்தியது. நடனம் ,சிறார்களின் மாறு வேடப் போட்டி, மாணவர் பேச்சுத் திறன் ,தமிழவேள் விருது , பார்வையாளர்களுக்குப் புதிர்ப் போட்டி, சிறப்புரை என பல்சுவை அங்கங்கள் நிறைந்து அரங்கமே அதிரும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.மூத்த நாடாளு மன்றச் செயலாளர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மாணவியரின் குறள் நடனமும் , சிறார்களின் மாறுவேடக் காட்சிகளும் பார்வையாளரை அசத்தின. முத்தாய்ப்பு நிகழ்வாக இவ்வாண்டுக்கான தமிழவேள் விருது அறிவிக்கப்பட்டது . சிங்கப்பூரின் மூத்த நாடக கலைஞர் , கவிஞர், நூலாசிரியர் , கலைச்செம்மல் விருது பெற்ற ச.வரதன் தமிழவேள் விருதாளராகப் பலத்த கரவொலிக்கிடையே அறிவிக்கப்பட்டார். அவருக்கு நான்கு சவரன் பொற்பதக்கம், பொன்னாடை , மாலை அணிவித்து சிறப்பு விருந்தினர் கவுரவித்தார்.

பேச்சுத் திறன் போட்டியில் மாணவர்கள் பேசி மகிழ்வூட்டினர்.பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ரியோனா அமல்ராஜ் தனது திறமையை வெளிப்படுத்தினார் .பிரசாந்த் குமார்- மதுவந்தி ஆகியோர் புதிர்ப்போட்டி நடத்தினர்.சிறு கதைப் போட்டி, குழந்தைகளுக்கான பாடல் போட்டி வெற்றியாளர்கள், சிறுகதையில் மணிமாலா ,கலைவாணி,அரசு நித்யா ஆகியோர் பரிசு பெற்றனர் . பாடல் போட்டியில் தவமணி,கோ.இளங்கோ,அழகு நிலா ஆகியோர் பரிசு பெற்றனர்.நிறைவாக, தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட, ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ண குமார் ,” எய்த விரும்பியதை எய்தலாம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் . கழகத் தலைவர் ஆண்டியப்பன் தலைமை ஏற்றார். விருது பெற்ற கலைஞர் வரதன் தக்க வகையில் ஏற்புரை ஆற்றினார். செயலாளர் சுப. அருணாசலம் - மெய்யம்மை பெரியண்ணன் ஆகியோர் நிகழ்வினைத் தொய்வின்றி சுவைபட நெறிப்படுத்தினர். துணைச் செயலாளர் கிருத்திகா நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நிலா 50

நிலா 50...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)