சிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் பேரவை விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் பேரவை விழா

ஏப்ரல் 21,2018  IST

Comments

தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் முகமது கவுஸ் தலைமையில் “ இன்பத் தமிழும் இளைய தலைமுறையும் “ என்ற தலைப்பில் சிறப்பானதொரு நிகழ்வை நடத்தியது. ஜலான் புசார் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரும் மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்ற மேயருமான திருமதி டென்னிஸ் புவா லே பெங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஆளூர் ஷா நவாஸ் மற்றும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்க கல்லூரி மாணவி செல்வி அருணா கந்தசாமி கலந்து கொண்டனர். ஸ்வப்னா ஸ்ரீ ஆனந்த் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. பத்தொன்பது முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான “ புதிய நிலா “ ஆசிரியர் மு.ஜஹாங்கிர் வரவேற்புரை ஆற்றினார். மலாய் மொழி மாணவர் காலித் சுபாண்டி தமக்குத் தமிழ் மொழி கற்க எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது என்பதை விளக்கியதோடு “ ஏதோ ஒரு ஞாபகம் “ எனப் பாட்டுப் பாடி – திருக்குறளையும் சொல்லி அரங்கை அதிர வைத்தார். சித்ரா மெய்யப்பன் தயாரிப்பில் மாணவர்கள் “ தமிழர்களே உங்களுக்குத் தெரியுமா “ என்ற நிகழ்வை நடத்தி அசத்தினர். மாணவி அருணா கந்தசாமி “ தமிழர்களும் தன்னம்பிக்கையும் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். காதர் முஹைதீன் பாட்டுப் பாடி மகிழ்வித்தார். ஆளூர் ஷா நவாஸ் “ இன்பத் தமிழும் இளைய தலைமுறையும் “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கவிஞர் இன்பா நிகழ்வினை நெறிப்படுத்தினார். மு.ஜஹாங்கிர் நன்றி நவில விழா இனிதே நிறைவு கண்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

ஆலையை மூட அரசாணை: மக்கள் நிபந்தனை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயல்பு நிலை கொண்டு வருவது குறித்து மீனவர்கள், பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோருடன் , மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சுவார்த்தை ...

மே 26,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us