கனடாவில் இந்து பாரம்பரிய மாதம் கடைபிடிப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கனடாவில் இந்து பாரம்பரிய மாதம் கடைபிடிப்பு

ஏப்ரல் 25,2018  IST

Comments




கனடாவின் மிகப் பெரிய பள்ளி வாரியமான டொரோன்டோ பள்ளி வாரியம், நவம்பர் மாதத்தை, இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது


மிகப் பழமையான இந்த ஆன்மிக வாழ்க்கை முறை குறித்து கனடா மாணவர்களுக்கு அறிவுறுத்துவதே இதன் நோக்கம் என்று டோரோன்டோ பள்ளி வாரியம் தெரிவித்துள்ளது கனடாவின் வளர்ச்சி, செழிப்புக்கு கனடாவில் உள்ள இந்து மதத்தினர் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ள இந்த வாரியம், கணிதம், வானஇயல், அறிவியல் போன்ற விஷயங்களைப் போதிக்கும் சனாதன தர்மம் எனப்படும் இந்து மதம், யோகா, தியானம், சைவ உணவு போன்ற ஆரோக்கிய நடைமுறைகளையும் உள்ளடக்கியது என்று தெரிவித்துள்ளது



600 பள்ளிகளில் 2 லட்சத்து 46 ஆயிரம் மாணவர்களைக் கொண்டுள்ள இந்த வாரிய பள்ளி மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரால் 120க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறது


டோரோன்டோ பள்ளி வாரியத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ள பிரபஞ்ச இந்து சமுதாயத் தலைவர் ராஜன் ஜெட், கனடா சமுதாயத்திற்கு இந்துக்கள் ஆற்றியுள்ள சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், இதர கனடா பள்ளி வாரியங்களும் இதே மாதிரி இந்து பாரம்பரியத்தைப் பரப்ப முன்வர வேண்டும் இந்துக்களின் முக்கிய பண்டிகைக்கான தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்க வேண்டும் இவ்வாறு விடுமறை விடுவதன் மூலம் மற்ற மதங்கள் குறித்தும் அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்வதோடு, விசால மனப் பக்குவம் கொண்ட குடிமக்களாக உருவெடுப்பார்கள் என்று கூறியுள்ளார்




Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

சமயபுரம் கோயில் நடை திறப்பு

திருச்சி : திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மசினிக்கு நேற்று மதம் பிடித்தது. மதம் பிடித்த யானை, பாகன் கஜேந்திரன் என்பவரை மிதித்து கொன்றது. இதனையடுத்து நேற்று ...

மே 26,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us