ஆக்லாந்தில் அம்ரிதா முரளியின் அமுதமான இன்னிசை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் அம்ரிதா முரளியின் அமுதமான இன்னிசை

மே 01,2018  IST

Comments

 

ஆக்லாந்து: நியூசிலாந்து ரசிகாஸ், சங்கீத பாரதி இணைந்து, ஆக்லாந்து கிராமர் ஸ்கூலில் உள்ள சென்டெனியல் கலை அரங்கத்தில், அம்ரிதா முரளியின் இசைகச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரோடு இணைந்து ஸ்ரீராம் குமார்- வயலின், மேலக்காவேரி கே.பாலாஜி- மிருதங்கம் வாசித்தார்கள்.

முதலில் 'சரணு சித்தி விநாயாக' என்ற சௌராஷ்ட்ரா ராகத்தில் அமைந்த புரந்தரதாஸரின் வர்ணத்தோடு கச்சேரியை தொடங்கி பின் ஆனந்தபைரவி ராகத்தில் 'பாஹே'ஸ்ரீ கிரிராஜஸூதே' என்ற ஷ்யாமா சாஸ்திரிகளின் கீர்த்தனையை பாடினார். தொடர்ந்து அம்ரிதா தியாகராஜரின் 'ரகுவர நன்னு' என்ற பந்துவராளி கிருதியை ஸ்வர ப்ரஸ்தாரங்களுடன் பாடினார். ஸ்ரீ நரசிம்மஜயந்தியை முன்னிட்டு அன்று நரசிம்மரை ஆராதித்து தீக்ஷிதரின் 'நரசிம்ம ஆகச்ச பரப்ரஹ்ம கூர்ச்ச' என்ற மோஹன ராகத்தில் அமைந்த க்ருதியை அருமையாக பாடி மற்றும் ஸ்வாதி திருநாளின் 'போகேந்திர சாயினம்' க்ருதியை குந்தல வராளி ராகத்தில் பாடி அதை தொடர்ந்து அன்று கச்சேரியில் கரகரப்ரியா ராகத்தை முதன்மை ராகமாக எடுத்துக்கொண்டு மிக விஸ்தாரமாக ஆலாபனை மற்றும் கல்பனா ஸ்வரங்களுடன் தியாகராஜரின் பிரபலமான 'சக்கனிராஜா' கீர்த்தனையை மிகச்சிறப்பாக பாடி ரசிகர்களின் கைதட்டலை பெற்றார்.

அடுத்து ராகம் தானம் பல்லவிக்கு கமாஸ் ராகத்தை மிகவும் குழைத்து கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். தொடர்ந்து தானத்தை குறிப்பாக லலிதா, தேஷ் போன்ற ராகங்களினால் ராகமாலிகையாக தொடுத்து வயலின் வித்வான் ஸ்ரீ ராம்குமார் இயற்றிய 'வராத வரமே' என்ற பல்லவியை சிறப்பாக பாடினார்.

அடுத்து சில துக்கடா கிருதிகளை பாண்டுரங்கன் மேலும் நரசிம்மர் மேலும் பாடினார். அதில் குறிப்பாக 'நமிதாதேவம் பஜே நரசிம்மம்' என்ற அன்னமாச்சார்யாவின் சங்கராபரண ராகத்தில் அமைந்த க்ருதியானது நரசிம்மஜெயந்தியை முன்னிட்டு சிறப்பாக பாடி கச்சேரியை இனிதாக மங்களம் பாடி முடித்தார். ஸ்ரீராம் குமாரின் அழுத்தமான வயலின் வாசிப்பில் கச்சேரிக்கு மேலும் வலுவூட்டினார். அவரின் வயலின் வாசிப்பு கச்சேரிக்கு நல்ல பக்கபலமாய் அமைந்தது. மிருதங்கம் மேலக்காவேரி பாலாஜியின் வாசிப்பு தனியாவர்த்தனத்தில் அலைகடலாய் ஆர்ப்பரித்து ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றது.

இறுதியில் பத்மா கோவர்தன் கலைஞர்களை பாராட்டி பேசினார். ரசிகாஸ் சார்பில் ப்ரியா ஸ்ரீநிவாசன் இனிமையாக வாழ்த்து கூறி, நன்றி தெரிவித்தார்

தொடர்ந்து மறுநாள் நியூசிலாந்து இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பாக வெல்லிங்டனில் அம்ரிதா முரளியின் கச்சேரி சிறப்பாக நடந்தது.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)