ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மகோத்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மகோத்சவம்

மே 01,2018  IST

Comments

பிரிஸ்பேனின் புறநகர்ப் பகுதியான தெற்கு மெக்லீனில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் மகோத்சவ விழா, கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் தினசரி பூசைகளும், மாம்பழ விழா, வேட்டை திருவிழா, சப்பரத் திருவிழா, தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா, பூங்காவனத் திருவிழா என சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.


பிரிஸ்பேன் நகரின் புறநகர்ப்பகுதிகளைத் தழுவி, பதினொரு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு நாள் திருவிழாவையும் அவ்வப்பகுதி மக்களிடம் ஒப்படைத்து விழாக்களை மிகச்சிறப்புடன் நடத்தினர்.



பூசைகளை, சிட்னியிலிருந்து வந்திருந்த சிவாச்சாரியார்களும் பிரிஸ்பேனைச் சேர்ந்த சிவாச்சாரியார்களும் முன்னின்று நடத்தி சிறப்புறச் செய்தனர்.


நாதஸ்வர வித்வான்களின் இசையுடன் ஒவ்வொரு திருவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்து விநாயகரின் அருள்பெற்றுச் சென்றனர். வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

விழாக்களை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த ஶ்ரீசெல்வ விநாயகர் கோவில் நிர்வாக குழுவினர், ஒவ்வொரு நாள் விழாவுக்கும் பொருப்பேற்று செவ்வுறச் செய்த தன்னார்வல பக்தர்கள், அவர்களுக்கு ஆதரவளித்த பக்தர்கள் மற்றும் நிதியுதவியும் பொருளுதவியும் செய்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இது போன்ற விழாக்கள் தொடர்ந்து நடைபெற்றால் நமது கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும்.


- நமது செய்தியார் ஆ சோ. ரெங்கநாதன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)