பிரான்சில் இன்னிசைக் கலை விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில் இன்னிசைக் கலை விழா

மே 11,2018  IST

Comments

பாரிஸ் : பிரான்சில் பிரன்ச் இந்தியக் கலை இலக்கியப் பண்பாடுக் கழகம் சார்பில் பாரிஸுக்கு அருகில் உள்ள அத்திஸ் மோன்ஸ் நகரில் இளவேனிற் காலத்தில் இன்னிசைக் கலை விழா மிக சிறப்பாக கொண்டப்பட்டது. மங்கள விளக்கேற்றல் பின் தமிழ் தாய் வாழ்த்து தொடர்ந்து சங்கத்தின் தலைவர் புலவர் பொன்னரசு வரவேற்புரை வழங்கினார். விழா தலைவராக பிரான்ஸ் சிவன் கோயில் துணைததலைவர் மோகன சுந்தரம் ஏற்று விழாவை தொடங்கினார்.

வாழ்த்துரை முத்துக்குமரன் வழங்க, உரை அரங்கம் ஆரம்பமாகியது. ஆசிரியர் சின்னப்பா "மாதவியும் சிலம்பும்" என்ற தலைப்பில் மிக அருமையான தமிழ் விருந்தளித்தார், தொடர்ந்து "தமிழர் விளையாட்டு" என்ற தலைப்பில் தலிஞ்சயன் முருகையனின் இலக்கிய செய்திகள் பலத்த கைத்தட்டல் பெற்றது. இளம் வழக்குறைஞர் குணசேகரின் "தமிழன் உலகுக் கோர் முன்னோடி" என்ற தலைப்பிலான உரை பார்வையாளர்களின் கரகோஷம் அரங்கத்தை அதிர செய்தது என்றால் மிகையாகாது.

"சித்திரை திங்களும் செந்தமிழர் வாழ்வியலும்" தலைப்பில் மோரோ நடராஜனின் பேச்சு நன்றாக அமைந்தது. கலை நிகழ்ச்சிகள் நடனம் நித்தியா இராஜமோகன் நடத்தினார். வினாடி வினா பதிலை சொல்லுங்கள் பரிசை வெல்லுங்கள் நிகழ்ச்சியை திருமதிகள் நிர்மலா, அமலொர்பவ மரி, விக்டோரியா சிவசங்கர் மற்றும் புலவர் பொன்னரசு ஆகியோர் சிரிப்பொலி பொங்க நடத்தி அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித் தார்கள். லதா ரவி ஆதவனின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
- நமது செய்தியாளர் முத்துக்குமாரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடி :தூாத்துக்குடி மக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி எண்களை அறிவித்துள்ளா். இதன் படி தூத்துக்குடி மக்கள் 1077 என்ற இலவச ...

மே 25,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us