குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-65” மாதாந்திர நிகழ்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-65” மாதாந்திர நிகழ்வு

மே 16,2018  IST

Comments

 

குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-65” மாதாந்திர நிகழ்வு, மற்றும் தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டு மரபுசார்ந்த ஓவிய போட்டி சிறப்பாக நடைபெற்றது. விழாவை பிரியா கண்ணன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர் இளங்கோவன் தலைமை ஏற்க, நடராஜன் (தலைவர்), பத்மநாதன் (பொருளாளர்) முன்னிலை வகிக்க, பாவேந்தர் கழக மகளிர் அணியினர் நமது பண்பாட்டு முறைப்படி குத்துவிளக்கு ஏற்ற விழா தொடங்கியது.

பிரியா கண்ணன், கயல்விழி தமிழ்த்தாய் வாழ்த்தும், முருகேசன் களப் பாடலும் பாடினார்கள். குறளோடு உறவாடு: ராஜதேவி சட்டநாதன் உரைக்க, கதைகேளு கனியாகு: கயல்விழி மிக சிறப்பான முறையில் கொண்டு செல்ல களைகட்டியது களம். நினைந்து நினைந்து நிகழ்வில் பாரதிதாசனைப் பற்றி வாசு இராமநாதன் (பொதுச்செயலாளர்), பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பற்றி க. பத்மநாதன் (பொருளாளர்) உரையாற்றினர். சிறப்பு நிகழ்வாக 'பாவேந்தரும் பைந்தமிழும்' என்ற தலைப்பில் கவிஞர் அபுதாஹிர் (முன்னாள் தலைவர்), 'பாவேந்தரும் பெண்ணியமும்' என்ற தலைப்பில் கவிதாயினி மோகனா சேகர், “பாவேந்தரும் பகுத்தறிவும்” என்ற தலைப்பில் கவிஞர் சதீஷ்குமார், 'பாவேந்தரும் சமுதாயமும்' என்ற தலைப்பில் கவிதாயினி அம்புஜலஷ்மி கவிதைகளை அரங்கில் படைத்தார்கள்.

சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களான சே (நிறுவனர், தெய்வ சேக்கிழார் பேரவை), அன்பரசன் (முதன்மை செயலாளர், தாய்மான் கலை இலக்கிய பேரவை), கவிஞர் முனு. சிவசங்கரன் (செயலாளர், வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம்) பாவேந்தர் கழகத்தின் செயல்பாடுகளையும், தமிழுக்கு ஆற்றி வரும் தொண்டுகளையும் பற்றி வெகுவாகப் பாராட்டினர்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஓவியப் போட்டியில் குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பாக நமது பாரம்பரிய கலை மற்றும் பண்பாடு சார்ந்த ஓவியங்களை வரைந்தனர் மேலும் போட்டியில் முதல் மூன்று நிலைகளில் வெற்றிப்பெற்ற குழந்தைகளுக்கு பட்டயமும் கலந்து கொண்ட மற்ற அனைத்துக் குழந்தைகளுக்கு பதக்கமும், சான்றிதழும் பாவேந்தர் கழகத்தின் முதன்மை கொடையாளர் சித்திக், சமூகஆர்வலர் இளங்கோவன் வழங்கினார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பண்ணுடன் சுவையான மாலை நேர சிற்றுண்டியாக (கேழ்வரகு கூழ் மற்றும் காராமணி பயறு சுண்டல்) சமூகஆர்வலர் இளங்கோவன் வழங்கிட விழா இனிதே நிறைவடைந்தது.

- தினமலர் வாசகர் வாசு இராமநாதன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

ஸ்டாலின் மீது 2 பிரிவுகளில் வழக்குபதிவு

சென்னை: தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் உள்பட 25 எம்.எல்.ஏ.,க்கள் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தலைமைசெயலகத்தில் போராட்டம் நடத்தியது,பொதுமக்கள், ...

மே 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)