சிட்னியில் சித்திரைத் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிட்னியில் சித்திரைத் திருவிழா

மே 23,2018  IST

Comments

  சிட்னி : தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் முத்திரை திருவிழாவான சிட்னியில் சித்திரைத் திருவிழா ஏழாம் ஆண்டில் தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து சிறப்பாக மே 6ம் தேதி சிட்னியில் உள்ள Blacktown Leisure Centre Stanhopeல் நடைபெற்றது. இவ்வாண்டில் ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி வாழ் மக்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த தமிழ்ப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்வாண்டின் சிறப்பம்சமாக முன்னணி தென்னிந்திய நகைச்சுவை நடிகர் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையம் சார்பாக நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், மயிலாட்டம், காளையாட்டம், தப்பாட்டம், காளியாட்டம், நய்யாண்டி மேளம், கிராமிய இசை கொண்ட 'தமிழ் மண்வாசனை நிகழ்ச்சி' நடைபெற்றது. மற்றும் உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சிப்ஸ் தமிழ் வானொலி, ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபண அரங்குகள் நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்தன. இந்திய மற்றும் தமிழக உணவு வகைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றன.

அமைப்பின் தலைவர் முத்து ராமச்சந்திரன் வரவேற்புரை வழங்க அமைப்பின் செயலாளர் அனகன் பாபு விழாவிற்கு தலைமை தாங்கி விழாவை துவங்கி வைத்தார். மாநில அமைச்சர்கள் மட்டும் அல்லாது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் பல்லின கலாச்சாரத்துறை அமைச்சர் ரே வில்லியம்ஸ் (Hon. Ray Williams MP), நியூ சவுத் வேல்ஸ் எதிர்கட்சித் தலைவர் சார்பாக ஜிகாத் திப் (Mr Jihad Dib MP) பரமாட்ட தொகுதிஉறுப்பினர் Dr. ஜெப் லீ (Dr Geoff Lee MP ), ஸ்ட்ராத்பீல்ட் தொகுதி உறுப்பினர் ஜோடி மக் கே (Ms Jodi Mckay MP), நியூ சவுத் வேல்ஸ் பல்லின கலாச்சார கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹரி ஹரிநாத் (Dr Hari Harinath), பிளக்டவுன் மாமன்ற உறுப்பினர் சூசை பெஞ்சமின் (Mr Susai Benjamin MC) உட்பட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமைப்பின் பொருளாளர் கர்ணன் சிதம்பரபாரதி நன்றியுரை வழங்கினார்.தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலை மற்றும் சித்திரை மாதத்தின் சிறப்பை பறைசாற்றும் விழாவாக சிட்னியில் சித்திரைத் திருவிழா வெற்றிகரமாக நடந்தேறியது.
- தினமலர் வாசகர் அனகன் பாபு

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)