உலகளாவிய கண்டுபிடிப்பு விருது அரை இறுதி போட்டியில் இந்திய வம்சாவளி இளைஞர்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உலகளாவிய கண்டுபிடிப்பு விருது அரை இறுதி போட்டியில் இந்திய வம்சாவளி இளைஞர்கள்

மே 31,2018  IST

Comments

கலிஃபோர்னியா மாநிலம் சாக்கிரமெண்ட்டோவின் 'தண்டர்பாட்ஸ்' அணி 'பஃர்ஸ்ட் லேகோ லீக் ரோபாடிக்ஸ்-ல்' கடந்த 2013-ம் ஆண்டு முதல் பங்கெடுத்து வருகின்றனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர்கள், ஒரு அணியாக செயல்பட்டு, எப் எல் எல் மற்றும் பொறியியல் துறைகளில், உள்ளுர் இளைஞர்களை ஊக்குவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 2018-ல், எப் எல் எல், எட்டாவது உலகளாவிய கண்டுபிடிப்பு விருதுப்போட்டிக்கு, 20 அணிகள் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றதாக அறிவித்தது. சுமார் 32,000 அணிகள், 2,55,000-ம் மேற்பட்டவர்கள், 88 நாடுகளிலிருந்து பங்கு பெற்றுள்ள நிலையில், 'தண்டர்பாட்ஸ்' அணி இறுதி சுற்றுக்கு தகுதியுற்றது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 

இவர்களின் தீர்வின் அசல் தன்மை உலகின் தண்ணீர் சுத்திகரிப்பிர்க்கு ஒரு முக்கிய பங்களிக்கிறது. 'ஹைட்ரொட்யனமிக்கஸ் (நீரியக்கவியல்)' சீசனில் 'அல்ட்ரா ஆர்கானிக்ஸ் பில்டர் (தீவிர கரிம வடிகட்டி)'-ஐ கண்டுபிடித்து, மனிதர்களின் சுத்திகரிகப்பட்ட நீர் உபயோகத்தை மேம்படுத்த முயல்கின்றனர். 

ஜூன் 19 - 21-ல், அமெரிக்கவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் சான் ஒசெவில், நிபுணர்கள் முன் தங்கள் கண்டுபிடிப்புகளை முன்வைப்பார்கள். உலகெங்கிலிருந்தும், 20 அணிகள், இந்த இரண்டு நாள் செய்முறை விளக்க அரை இறுதியில் கலந்துக் கொண்டு தங்களின் கண்டுப்பிடிப்புகளை விளக்கி, மற்றவர்களுடனும் கருத்து பரிமாற்றம் செய்வர். 

சான் ஒசெவின் மாநில பல்கலைக்கழக மாணவர் சங்கம் வளாகத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், தங்களின் கண்டுபிடிப்பை முழுமையாக செயல் படுத்த முதல் பரிசாக 20000 அமெரிக்க வெள்ளிகளும், இரண்டு அணிகளுக்கு தலா 5000 அமெரிக்க வெள்ளிகளும் இரண்டாம் பரிசாக வழங்குவார்கள்.

'அல்ட்ரா ஆர்கானிக்ஸ் பில்டர்' மிகவும் அசுத்த நீரிலிருந்து பாக்டீரியா மற்றும் உலோக அசுத்தங்களை குறைந்த செலவு இயற்கைக் கூறுகளை பயன்படுத்தி வடிகட்டி பைகள் மூலம் ஒரு விரைவான மற்றும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய, பயனுள்ள வழியில் நீக்குகிறது. இந்த வடிகட்டி பைகளில் தனிப்பட்ட பண்புகள் கொண்ட பல பொருட்கள் உள்ளன. அவை கீழ்வருமாறு: மல்லி (கொரியண்டம் சாதிவம்) இது ஆர்சனிக்கை நீக்குகிறது; நசுக்கிய கிளிஞ்சல்கள் மற்றும் ரமச்சாம் (வெடிவேரியா ஸிசானாய்டுகள்) ஈயத்தை அகற்றுகிறது;முருங்கை விதைகள் (மொரிங்கா ஒலிபெரா) பாக்டிரியா செல்களை உருக்கி அழிக்கிறது; மற்றும் கரி - இரசாயனங்கள், சுவை மற்றும் வாசனையை நீக்குகிறது. எங்கள் அமைப்பு முறையை உருவாக்கும் இந்த அனைத்து பொருட்களும் நீர் வடிகட்டுதல் மற்றும் கொந்தளிப்புக்காக தனித்தனியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எங்களின் முன்மொழியப்பட்ட முறை, மூன்று படி செயல்முறை மூலம் விளக்கலாம்: வடிகட்டி, சூரிய ஒளி நீர் நீக்குதல் மற்றும் ஊடுருவி வடிகட்டி பைகள் மூலம் ஊற்றி சரியான விகிதத்தில் பொருட்களின் கலவையை இணைத்து பயன்படுத்துகிறது. இந்த வடிகால் பைகளை குறைந்த செலவும், முயற்சியும் கொண்டு கிராம மக்களால் உருவாக்க முடியும். தண்ணீரில் இருந்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும், மாசுபடுத்திகளையும் அகற்றுவதன் மூலம் சுத்தமான நீரை பெறாத மக்களால் ஏற்படுகின்ற நோய்களைப் பரவுவதை தடுக்கலாம்.

இந்தப் போட்டியில் அணிகள் செயல்படுத்தப்படுவதற்கான சாத்தியமான தடைகளைக் கருத்தில் கொண்டு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்துறையில் பணியாற்றும் தொழில் சார்ந்தவர்களிடம் அவற்றின் கண்டுபிடிப்பு மதிப்பீட்டை ஆவணப்படுத்த வேண்டும். உலகளாவிய பிரச்சினைகளை தீர்ப்பதில் கடந்த வென்ற அணிகள் கவனம் செலுத்தின. கடந்த இறுதி சுற்றில் கண்டுபிடிப்புகள் காப்புரிமைகள் பெற்றன. நிறுவனங்கள் அவற்றை செயல்முறைப்படுத்தி வணிகங்களை தொடங்கின.
- தினமலர் வாசகர் பரமேஸ்வரன் லட்சுமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

ரெய்டு ஏன்? ஓ.பி.எஸ்., விளக்கம்

கோவை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், வரி ஏய்ப்பு தொடர்பாக தான் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. இதற்காக ஒரு கட்சியை தொடர்புபடுத்துவது ...

ஜூலை 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)