சீன மொழிப் போட்டியில் விருது பெற்ற தமிழ் குழந்தைகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சீன மொழிப் போட்டியில் விருது பெற்ற தமிழ் குழந்தைகள்

ஜூன் 02,2018  IST

Comments

ஹாங்காங் : பள்ளி குழந்தைகளின் பாடல், பேச்சு மற்றும் மாண்டரின் மொழி கற்றல் திறன் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான ஒவ்வொரு ஆண்டும் ஜூயோயங்யாங் கப் சீன திறமைப் போட்டி ஹாங்காங்கில் நடத்தப்படுகிறது. 4வது ஆண்டாக இம்முறை, சர்வதேச ஜூயோயங்யாங் போட்டி, சர்வதேச அடிப்படை சீன மொழி ஆராய்ச்சி கழகம், இஎஸ்எப் மற்றும் எச்கே கழகங்கள் சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் சுமார் 700 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சீனர்கள் அல்லாதவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் 2 தமிழ் குழந்தைகள் பரிசுகளை பெற்றனர். சீன கலாச்சார சாம்பியன் விருது, பின்யின் ஸ்டிரோக் கவுண்டிங், பாட்டுப் போட்டி ஆகிய சாம்பியன் விருதுகளை காவியா பெற்றார். வாய்மொழி மொழிபெயர்ப்பு பிரிவில் சாம்பியன் விருதினையும், பின்யின் ஸ்டிரோக் கவுண்டிங் பிரிவில் முதல் ரன்னர் அப் பரிசினையும் தண்ணீர்மலை பெற்றார். மாண்டரின் மொழியை தங்கள் குழந்தைகள் ஆர்வமுடன் கற்றது குறித்து இருவரின் பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)