சிட்னியில் நகரத்தார் வைகாசி விசாகத் திருவிழா! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிட்னியில் நகரத்தார் வைகாசி விசாகத் திருவிழா!

ஜூன் 03,2018  IST

Comments

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நகரத்தார் குடும்பத்தினர் பல்வேறு மொழி, சமூகம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தும் நோக்கோடு ஆஸ்திரேலியா நகரத்தார் அஸோஸியேஷன் என்ற கூட்டமைப்பை உருவாக்கி நடத்தி வருகின்றனர். தமது முதல் நிகழ்ச்சியாக அரசு ஆதரவுடன் ஆஸ்திரேலியா சுத்த தினம் என்ற நிகழ்ச்சி மூலம், சிட்னி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலைச் சுத்தம் செய்தனர். அறுபதுக்கும் மேலான அன்பர்கள் செய்த இந்த சேவையை கோவில் நிர்வாகம் பாராட்டி கௌரவித்தது.

முருகப் பெருமானின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் வைகாசி விசாக தினத்தை முருகன் சன்னிதானத்தில் இந்த அமைப்பில் உள்ள நகரத்தார்கள் ஒன்று சேர்ந்து மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். முருகப் பெருமானுக்கு விஷேஷ அபிஷேக, ஆராதனையுடன் நகரத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து பஜனைப் பாடல்கள் பாடி முருகப் பெருமானின் பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர். 80 பேருக்கும் மேலாகக் கலந்துகொண்ட இந்த விழாவில் முப்பது குழந்தைகள் தமிழில் கந்தர் சஷ்டிக் கவசம் முதல் பல பஜனைப் பாடல்கள் பாடியது மிகவும் சிறப்பாக இருந்தது. வைகாசி விசாகத் திருவிழாவை சிட்னியில் நகரத்தார் அனைவரும் இவ்வாறு சேர்ந்து கொண்டாடுவது இதுவே முதல் முறை. இந்த அமைப்பில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் அண்டை மாநிலங்களில் வசிக்கும் நகரத்தார் அனைவரையும் ஒன்று சேர்த்து இந்த வருடம் தீபாவளி மற்றும் பிள்ளையார் நோன்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

-தினமலர் வாசகர் கிருஷ்ணன் ராஜேந்திரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)