இலண்டன் மாநகரில் ஒரு ஆன்மீக சத்சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இலண்டன் மாநகரில் ஒரு ஆன்மீக சத்சங்கம்

ஜூன் 03,2018  IST

Comments

இலண்டனில் கிராய்டன் என்ற பகுதியில் ஒரு ஆன்மீக சத்சங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த சத்சங்கத்தில் இலண்டன் வாழ் இந்தியா சமுக மக்கள் பலர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். இந்த சத்சங்கத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் இருந்து சுவாமி சக்ஷத் க்ருத்தானந்தா கலந்து கொண்டு ஆன்மீக சத்தசங்கம் நடத்தினர். இவர் எடுத்துக் கொண்ட தலைப்பு தியானம் பற்றியதாகும். அரங்கத்தில் கூடிய அனைவரும் மிக அமைதியாக அவரது பேச்சினைக் கேட்டனர். தியானம் பற்றி அறியாதவர்களும் மிக எளிய முறையில் தெரிந்து கொள்வதற்கு வசதியாக அவரது உரை இருந்தது. இவர் சுவாமி தயானந்த சரஸ்வதியின் சீடர. இதற்கு முழு ஏற்பாடுகள் செய்தவர் ஆதித்தியா குரு. இவர் காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்டவர். இலண்டன் போக்குவரத்து துறையில் பொறியாளராகப் பணியாற்றுகின்றார். இது போன்ற ஆன்மீக சொற்பொழிவு, சத்சங்கம் போன்ற கலாச்சார சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடத்துவது நமது நாட்டின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மேன்மேலும் வளரச் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்று கூறலாம்.

- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

கறுப்பு கொடி வீச்சு: திமுகவினர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையல், ஆய்வுக்கு சென்ற கவர்னர் பன்வாரிலால் கார் மீது கறுப்பு கொடி வீசியதாகவும், கறுப்பு பலூன்களை வீசியதாக 300க்கும் மேற்பட்ட ...

ஜூன் 22,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)