லண்டன் மாநகரில் தேரோட்டத் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லண்டன் மாநகரில் தேரோட்டத் திருவிழா

ஜூன் 05,2018  IST

Comments

இலண்டனில் ‘எப்சம்’ என்ற பகுதியில் ‘ஸ்டோன்லே’ என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் 03.06.2018 அன்று தேரோட்டத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. சர்வலோக நாயகியாகிய அன்னை பராசக்தி இராஜராஜேஸ்வரி அம்பாள் ‘இரதம’; என்ற கூறப்படுகின்ற தேரில் பவனி வந்த காட்சி ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

தமிழகத்தின் பாரம்பரியத்தையும், ஆன்மீக பண்பாட்டையும் இலண்டனில் உள்ள இந்திய வாழ் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கடைபிடித்து வருகின்றார்கள் என்பதற்கு இந்த தேரோட்டத் திருவிழா ஒரு சிறந்த சான்றாகக் கருதலாம் அல்லவா? விழாவினை முன்னிட்டு ஆங்காங்கே இலவசமாக மோர்,நன்னாரி சர்பத், நெல்லிக்காய் சர்பத், ரோஸ்மில்க் ஆகியவை பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டன. அன்னதானமும் மிக சிறப்பாக நடைபெற்றது.

இராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் முக்கிய மூலவராக இராஜராஜேஸ்வரி அம்பாள் அருள்பாலிக்கின்றாள். அம்பாள் சன்னதிக்கு இருபுறமும் வினாயகரும்,முருகனும் தனித்தனி சன்னதிகளில் இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றனர். மேலும் அருள்மிகு தெய்வங்கள் தட்சிணாமூர்த்தி, அண்ணமலையார், உண்ணாமுலை அம்மன், இரங்கநாதபெருமாள், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸ்ரீவெங்கடேஸ்வரர், பத்மாவதி தாயார், வினாயகர், ஸ்ரீகணபதி, திருச்செந்தூர் முருகன், உமா மகேஸ்வரர் ஸ்ரீநடேசர், சிவகாமி ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதாரிகா, ஸ்ரீசண்டிகேஸ்வரி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஇலட்சுமி பிராம்மி, மகேஸ்வரி, சௌமாரி, வராஹி, மாஹேந்தரி, சாமுண்டா, மகாலட்சுமி நவக்கிரகங்கள் ஆகியவர்களை வழி படுவதற்கு இத்தலத்தில் மூர்த்திகள் உள்ளன.

மேலும் திருத்தலம் பற்றி செய்திகள் அறிந்து கொள்ளஅணுக வேண்டிய தொலைபேசிஎண் 020 8393 8147.


- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

கறுப்பு கொடி வீச்சு: திமுகவினர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையல், ஆய்வுக்கு சென்ற கவர்னர் பன்வாரிலால் கார் மீது கறுப்பு கொடி வீசியதாகவும், கறுப்பு பலூன்களை வீசியதாக 300க்கும் மேற்பட்ட ...

ஜூன் 22,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)