குவைத் தமிழோசை கவிஞர் மன்ற 146-ம் மாதாந்திர சிறப்பு கூட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத் தமிழோசை கவிஞர் மன்ற 146-ம் மாதாந்திர சிறப்பு கூட்டம்

ஜூன் 08,2018  IST

Comments

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் 146-ம் மாதாந்திர சிறப்பு கூட்டம் இவ்வாண்டின் புனித ரமளான் மாதத்தின் இசுலாமியச் சொந்தங்கள் நோன்பு திறக்கும் "இஃப்தார்-2018" நிகழ்வுடன் மிகச்சிறப்பான முறையில் நடந்தேறியது.


தமிழோசையின் காப்பாளர் குழுவின் அங்கத்தினர்-மூத்த கவிஞர் விட்டுக்கட்டி மஸ்தான் "கிராஅத்"(இறை மறை வசனம்) ஓதி நிகழ்வினைத் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தாயகத்திலிருந்து வருகை புரிந்த இசுலாமிய மார்க்க அறிஞர்- அஷ்ஷைக் அஃப்ழலுல் உலமா ஜனாப்.சேகு அலி ஃபிர்தௌசி (சிறப்பு விருந்தினர், இசுலாமிய வழிகாட்டி மையம்,குவைத்) -முதல்வர்,காயல்பட்டினம் தஃவா மையம்) அருமையான சமய நல்லிணக்க உரையாற்றினார்.குவைத் செந்தமிழ் கலைமன்ற நிறுவனர்-தலைவர் இராஜசேகர் தமிழோசையின் தங்குதடையில்லாத் தண்டமிழ்ப்பணி-நல்லிணக்கத் தொண்டினை நினைவு கூர்ந்து ரமளான் வாழ்த்துரை வழங்கினார்.பின்பு அனைவரின் 'துஆ'(இறை வேண்டுதல்)விற்குப் பின்னர் நோன்பு திறப்பானது நிறைவாய் மேற்கொள்ளப்பட்டது.மக்ரிப் தொழுகைக்குப் பின்னர் எல்லோருக்கும் அறுசுவை விருந்தளிக்கப்பட்டது.

இரண்டாம் அமர்வில் தமிழோசையின் மூத்த கவிஞர் வித்யாசாகர் அவைத் தலைமையேற்று,"ஏதிலியரைக் காதலிப்போம்!"என்ற தலைப்பில் கவிபாடிச் சிறப்பித்தார்.மன்றத்தின் நெடுநாளைய உறுப்பினர் மற்றும் குவைத் தெய்வ சேக்கிழார் பேரவையின் நிறுவனர் சேகர் முன்னிலை வகித்தார்.தலைவர் இராபர்ட் வரவேற்புரையாற்றி, மன்றத்தின் கொள்கைப்பாடலையும் பாடி,சிறப்பு அழைப்பாளருக்கென மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசினையும் வழங்கினார்

தொடர்ந்து தமிழோசையின் கவிஞர்கள் சிந்தை தூண்டும் கவிதைகளை வழங்கிட,பாடகர்கள் இசுலாமிய கீதங்களை இசைத்தனர்.கௌரவத் தலைவர் சா.சாதிக் பாட்சா "தீன்புகழ் நோன்பின் வான்புகழ் மாண்புகள்!" என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கவிஞர் பட்டுக்கோட்டை பாலு-"பெற்றோர்கள் என்னும் பெருங்கடல்கள்!", காப்பாளர் முகுந்தை உ.கு.சிவகுமார்-"கைம்பெண்" மற்றும் கவிதாயினி சபூரா ஹமீத்-"ரமளானின் ரஹமத்!" ஆகிய தலைப்புகளில் அருமையாய் கவிதைகளை வாசித்தளித்தனர்.குவைத் "மஞ்சள் நிலா" இசைக்குழுவின் நிறுவனர் மஞ்சுளா துரைசாமி இறைநேசப் பாடலைப் பாடினார் குவைத் தாய்மண் கலை இலக்கியப் பேரவையின் முதன்மைச் செயலாளர் க.மீ.அன்பரசன் மற்றும் மன்றச் செயற்குழு உறுப்பினர் மகிழன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.அண்மையில் இயற்கையெய்திய தமிழறிஞர் பேரா.ம.இலெனின் தங்கப்பா,எழுத்தாளர் பாலகுமாரன் மற்றும் தமிழறிஞர்-இலக்கியப் பேச்சாளர் அ.அறிவொளி ஆகியோரின் மறைவிற்காய் கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உலக சுற்றுச் சூழல் நாளை (சூன் 5) முன்னிட்டு " மாசுபடுதலை மறுதலிப்போம்!" என்னும் தலைப்பிலொரு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சிறப்பு நிகழ்வாய் நடைபெற்றது.மன்றத்தின் பொதுச்செயலாளர்-கவிஞர் பட்டுக்கோட்டை சத்யன் நெறியாளராய் அறிமுகவுரையாற்றிக் கருத்தரங்கினைத் துவக்கி வைத்தார்.பொறியாளர் ஹமீத் "நிலத்தில்!" என்றும், வல்லம் அபபாஸ்-"நீரில்!" மற்றும் பொறியாளர் ப.சேகர்-"காற்றில்!"என்றும் அறிவியல் பூர்வமாய்த் திறம்படக் கருத்துரைத்தனர்.சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் கொடிய நச்சாலைகள் குறித்தும்,மக்களின் கடமைகள் குறித்தும் விளக்கினர்.

தமிழோசையின் துணைச்செயலாளர் திரு.மன்னை ராஜாவின் ஒருங்கிணைப்பின் கீழ் மருத்துவ அணி செயலாளர் ஜோசஃபின் இராபர்ட்,கவி.பாலு,நாட்டுப்புறப் பாடகர் பாண்டி உள்ளிட்ட உறுப்பினர்கள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செவ்வனே செய்திருந்தனர்.கவி.மஸ்தான் இறுதியில் நன்றியுரையினை நவின்றார்.


- தினமலர் வாசகர் பட்டுக்கோட்டை சத்யன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

நிர்மலா தேவிக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: கல்லூரி மாணவியரை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை ...

ஜூன் 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)