நியூஜெர்சியில் மகாபெரியவா ஜெயந்தி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூஜெர்சியில் மகாபெரியவா ஜெயந்தி

ஜூன் 08,2018  IST

Comments

காஞ்சி மகாபெரியவர் ஶ்ரீ சந்ரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 125 வது ஜெயந்தி நியூஜெர்சி மால்பறோ குருவாயூரப்பன் கோவிலில் மிக விமரிசையாக நடந்தது.

விழாவிற்காக புனிதமான கங்கை நீர் நிறம்பிய 180 சொம்புகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது. ஏப்ரல் 13ம் தேதியில் இருந்து ஒவ்வொரு வார இறுதியிலும் ந்யூஜெர்சி மகாபெரியவா மணிமண்டப தன்னார்வ தொண்டர்கள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று பாத பூஜை செய்து, கங்கை சொம்பை பக்தர்களிடம் கொடுத்தனர். வீட்டு உறுப்பினர்களும் அந்த கங்கை ஜலம் நிரம்பிய சொம்பை தினமும் மிகிந்த பக்தியுடன் பூஜை செய்து ஜூன் 2ம் தேதியன்று எடுத்து வந்தனர்.

மகாபெரியவரின் 125 வது ஜெயந்தி அன்று காலை நாதஸ்வர மேளதாளத்துடன் மகாபெரியவரின் சிலை மற்றும் பாதுகையும் உள்ளே நுழையும் காட்சி, நாம் ஒருவேளை காஞ்சியில் தான் இருக்கிறோமோ என்று எல்லோரையும் நினைக்க வைத்தது.கோ பூஜை முடிந்தவுடன், எல்லா அபிஷேகமும் முடிந்த பிறகு கங்கா ஜல அபிஷேகம் நடைபெற்றது.பிறகு மல்லிபைப்பூ பந்தலில் மகாபெரியவா எழுந்தருளினார். பக்தர்கள் எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் இசைக்கச்சேரி நடைபெற்றது. முத்தாய்ப்பாக பல்லக்கு ஊர்வலம் வெகு சிறப்பாக நடந்தது.

விழாவை மிக சிறப்பாக நடத்திய சூரி மற்றும் ஆர்த்தி சூரி கடின உழைப்பிற்கு அன்பார்ந்தத பாராட்டுக்கள். இந்த இனிய நிகழ்ச்சிக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்த சிவகுமார், ஹரி, குருமூர்த்தி, நாராயணன், குரு, பரத் , கேசவ், சூர்யநாரயணன் போன்ற அனைத்து தொண்டர்களுக்கும் மிக்க நன்றி.

- தினமலர் வாசகி அலமேலு சூரி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

ரெய்டு ஏன்? ஓ.பி.எஸ்., விளக்கம்

கோவை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், வரி ஏய்ப்பு தொடர்பாக தான் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. இதற்காக ஒரு கட்சியை தொடர்புபடுத்துவது ...

ஜூலை 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)