சிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய மகா கும்பாபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய மகா கும்பாபிஷேகம்

ஜூன் 08,2018  IST

Comments

சிங்கப்பூர் : “ ஜெய் ஸ்ரீமந் நாராயணாய “ என்ற கூடியிருந்த ஆயிரமாயிரம் பக்தர்களின் சரண கோஷ அருள் அலைகள் திக்கெட்டும் பரவ 148 ஆண்டு தொன்மை வாய்ந்த சிங்கப்பூர் வாட்டர் லூ தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் மகா சம்ப்ரோக்சணம் ( கும்பாபிஷேகம் ) ஜூன் மூன்றாம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. நாதஸ்வர மங்கள வாத்தியம் முழங்க , குமாரி மல்லிகா கிரிஷ் பணிக்கர் குழுவினரின் ராதா கிருஷ்ண நடனம் வரவேற்க யாகசாலையிலிருந்து புனித கடங்கள் புறப்பட்டுக் கோவிலை அடைந்திட காலை 9.15 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தகவல் தொடர்பு மற்றும் வர்த்தகத் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மத்திய வர்த்தக வட்டார மேயரும் ஜலான் புசார் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான டெனிஸ் புவா இந்தியப் பாரம்பரிய முறைப்படி பட்டுப் புடவையில் வருகை தந்து அசத்தினார். மரின் பரேட் நாடாளு மன்ற உறுப்பினர் எட்வின் தோங் கலந்து கொண்டு பெருமைப்படுத்தினார். அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தவாறு இவ்வாலயம் பல இன மக்கள் பயன் பெறுமாறு அமைந்துள்ளது. ஏழு ஆண்டுகள் ப.சிவராமன் தலைமையிலான குழு புதுப்பிப்பு பணியை அற்புதமாகச் செய்து முடித்து ஆலயம் இன்று புதுப்பொலிவோடு திகழ்கிறது. சுவரோவியங்கள் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன. பக்தர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஸ்ரீ ருக்மணி சமேத கிருஷ்ணனுக்குத் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)