மலேசியாவில் நாட்டிய பிரம்மோற்சவம் மற்றும் கலைவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் நாட்டிய பிரம்மோற்சவம் மற்றும் கலைவிழா

ஜூன் 10,2018  IST

Comments

மலேசியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் சங்கம், மலேசிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் மற்றும் சென்னை ஶ்ரீபனா கலைக்கூடம் இணைந்து நாட்டிய பிரம்மோற்சவம் மற்றும் கலைவிழா கோலாலும்பூரில் ஏற்பாடுசெய்திருந்தனர். நாட்டியக் கலை விழா மற்றும் நாட்டிய பிரம்மோற்சவம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் கதக், பரதம், நாட்டுப்புற நடனங்கள் அடங்கிய ‘நாட்டியக் கலை விழா’ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. மலேசியா வாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கமானது இந்திய தூதரகத்தின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலாச்சார மையம் மற்றும் தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற பரதநாட்டியக் குழு ஶ்ரீபனா கலைக்கூடத்துடன் இணைந்து நாட்டியக் கலை விழா ஜூன் 3 - ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற பத்து பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், நாட்டியக் கலைஞர்கள் வெளிப்படுத்திய நவரசங்கள் மற்றும் பாவனைகள் தன்னை மிகவும் பரவசப்படுத்தியதாகவும், பல்வேறு பணிகளுக்கிடையில் இளைப்பாறக் கிடைத்த வாய்ப்பாகவும் இருந்தது என்று தெரிவித்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அஸ்ட்ரோ டாக்டர் ராஜாமணி, சென்னை பல்லவபுரத்தில் இருந்து வந்திருந்த நாட்டியக் கலைஞர்களின் நடனங்கள் சிலிர்ப்பூட்டும் விதத்தில் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டினார்.

ஜூன் 2 ம் தேதி ஶ்ரீபனா கலைக்குழுவினரின் நாட்டிய பிரம்மோட்சவத்தை பத்து மலை சீனிவாச பெருமாள் சன்னதியில் மலேசியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் சங்கம் ஒருங்கிணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த லேடர்ஸ் கமர்ஷியல் செழியன் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைவர்க்கும் மலேசியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜாகண்ணன் நன்றி தெரிவித்தார்.


-நமது செய்தியாளர்: வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)